என்ன ஒரு வில்லத்தனம்.. இப்படியா ஹோலி கொண்டாடுவாங்க.. மிரள வைக்கும் ராஷி கன்னாவின் வீடியோ!
சென்னை: ராஷி கன்னாவின் ஹோலி பிராங்க் வீடியோ வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள் பலரும் தங்களின் அன்புக்குரியவர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ராஷி கன்னாவும் ஹோலி பண்டிகையை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

மொட்டை மாடியில்..
ராஷி கன்னா தனது சகோதரருடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார். அவரது ஹோலி பிராங்க் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது வீட்டின் மொட்டை மாடியில் தனது சகோதரரை நிற்க வைக்கும் ராஷி கன்னா அவரது கையில் ஒரு கயிரில் இருப்பக்கமும் தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டீலை கட்டி தொங்கவிட்டுள்ளார்.

நம்பிய அண்ணன்..
அதை அவரது சகோதரர் பிடித்திருக்க அவரது கையின் மேல் கலர் பவுடர் கொட்டப்பட்டுள்ள பேப்பரை கொடுக்கிறார். தங்கையும் ஏதோ வித்தியாசமாக செய்கிறார் என்று ஆர்வமாய் அவர் சொல்வதை செய்து கொண்டிருக்கிறார்.

குதித்து கொண்டாட்டம்
எல்லாம் முடிந்ததும், கத்தரிக்கோலால் ஒரு பக்கம் தொங்கும் பாட்டீலை கட் பண்ணிவிடுகிறார். இதனால் அவரது சகோதரர் கையில் வைத்திருந்த காகிதம் கலர் பொடியுடன் அவரது முகத்தில் படுகிறது. இதனை பார்த்து குதித்து கொண்டாடுகிறார் ராஷி கன்னா.
டேபிள்ஸ் மாறிவிட்டது..
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள குழந்தைகளாக இருந்த போது அவர்தான் இப்படி பிராங்க் பண்ணுவார், இப்போது அந்த டேபிள்ஸ் மாறிவிட்டது.. ஹேப்பி ஹோலி புரோ என பதிவிட்டுள்ளார்.

அள்ளும் லைக்ஸ்..
ராஷி கன்னாவின் இந்த வீடியோ 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளிக் குவித்துள்ளது. பலரும் ராஷி கன்னாவின் இந்த பிராங்க்கை சூப்பர் என பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











