கருப்பு சேலையில் படுகவர்ச்சியாக கிறங்க வைக்கும் போஸ் கொடுத்த மில்க் பியூட்டி ராஷி கண்ணா!
சென்னை: இமைக்கா நொடிகள் ,சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து புதிய வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ராஷி கண்ணா
கடைசியாக வெளியான அரண்மனை 3 எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அடுத்ததாக ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற மும்முரத்தில் உள்ளார்
ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தவர் இப்போது முற்றிலும் கவர்ச்சிக்கு தயாராகி வர இப்பொழுது கருப்பு சேலையில் அதீத கவர்ச்சியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

தொடர்ந்து விஜய் சேதுபதியுடன்
விஜய்சேதுபதி, நயன்தாரா, அதர்வா ஆகியோரின் நடிப்பில் தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இமைக்காநொடிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் அடுத்தடுத்த படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் சங்கத்தமிழன் மற்றும் துக்ளக் தர்பார் என விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.

பிரம்மாண்ட வெப் சீரிஸ்
இப்பொழுது மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பிரம்மாண்ட வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்கிய டீகே மற்றும் ராஜ் ஆகியோரின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் ஹிந்தியில் உருவாக உள்ளது சீரிஸில் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இதில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது

அரண்மனை 3 வெற்றியை தரவில்லை
துக்ளக் தர்பார் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத் தரவில்லை . சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 3 திரைப்படமும் இவருக்கு கை கொடுக்கவில்லை. ஹாரர் கலந்த காமெடி கதை களத்தில் வெளியான அரண்மனை 3ல் ராஷி கண்ணாவுக்கு ஜோடியாக ஆர்யா நடித்திருந்தார். ராஷி கண்ணாவின் நடிப்பு கவர்ச்சி நடனம் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றது.

கருப்பு சேலையில் கிறங்க வைக்கும்
தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமாக உள்ள ராஷி கண்ணா தமிழில் அறிமுகமான ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறி வருகிறார். குறிப்பாக சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் கருப்பு சேலையில் தடாலடியாக அதீத கவர்ச்சியில் ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்களை இப்பொழுது பதிவிட்டுள்ளது லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











