Raashi Khanna: அந்த படம் தோல்வியடைய காரணம் இதுதான்.. ராஷி கன்னா வெளிப்படையான பதில்!

சென்னை: மெட்ராஸ் கபே படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷிகன்னா. அதன்பின் அடுத்தடுத்த படத்தில் நடித்து குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோயினாக மாறினார். இதைத்தொடர்ந்து, தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிப்படத்தில் வரும் இவர், யூடியூப் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், அந்த படத்தில் நடிக்கும் போதே படம் வெற்றி பெறாது என தெரியும் என கூறியுள்ளார்.

ராசி கண்ணா, பவன் கல்யாணுக்கு ஜோடியாக 'ஊஸ்தாத் பகத்சிங்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட ராஷி கன்னா,'தெலுசு காடா' பட தோல்வி குறித்து பேசி உள்ளார். அந்த படத்தில் நடிக்கும் போதே எனக்கு படத்தினுடைய வெற்றி எப்படி இருக்கும் என்பது தெரிந்து விட்டது. ஏனென்றால் படத்தில் எனக்கு பிடிக்காதா பல காட்சிகள் இடம் பெற்று இருந்தன. சில காட்சிகளில் படமாக்கும் போது அது எனக்கு சரியில்லை எனத் தோன்றியது. ஆனாலும் இயக்குனர் மீது இருந்த நம்பிக்கையால் மாற்றுக் கருத்து ஏதும் சொல்லாமல் அந்த படத்தில் நடித்து முடித்தேன்.

Raashi Khanna photo interview
Photo Credit:

தோல்விக்கு காரணம் இதுதான்: ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அறுவை சிகிச்சை காட்சியில் எனக்கு நடிக்க விருப்பமே இல்லை. இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சி என்பதால் தவிர்க்க முடியாமல் அதில் நடிக்க வேண்டியதாகி விட்டது. அந்த படம் எங்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை சொல்லி கொடுத்துள்ளது. எந்த கருத்தாக இருந்தாலும் அதை ஆழமாக அழுத்தமாக சொல்ல வேண்டும் என்று. அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பின் போது, கதையை பலமுறை மாற்றி மாற்றி எடுத்தார்கள் இதுதான் அந்த படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என ராஷிகன்னா அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார். நீரஜா கோனா இயக்கத்தில் 'தெலுசு காடா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தசித்து ஜொன்னலகட்டா, ராஷி கண்ணா மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய நடித்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X