Raashi khanna: பட்டனை போடுங்க மேடம்.. ராஷி கன்னாவின் எக்குத்தப்பான போஸ்!
சென்னை: டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கண்ணா மெட்ராஸ் கபே படத்தில் நடித்தன் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் வகையில் கவர்ச்சி போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
அழகான க்யூட்டான நடிகையான ராஷி கன்னா பாடகி ஆகவேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கான பயிற்சி எடுத்து வந்த அவருக்கு அது நடக்காமல் போனதால், மாடலிங் பக்கம் சென்றார். கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும் போதே, விளம்பர படங்களில் நடித்துக்கொண்டிருந்த ராஷி கன்னா அப்படியே சினிமாவிற்கு தாவினார்.

பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர், இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தார். அந்த படத்திற்கு பின் அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார்.
ஃபார்ஸி: தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கிய ஃபார்ஸி என்ற வெப் தொடரில் ஷாகித் கபூர், விஜய்சேதுபதி, கேகே மேனன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோருடன் ராஷி கன்னா நடித்திருந்தார். தற்போது, யோதா என்ற ஹிந்தி படத்திலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 4 படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கன்னா, உள்ளாடை எதுவும் அணியால், கோட் பட்டனை கழட்டிவிட்டு, எக்குத்தப்பாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே ஏராளமான லைக்குகளை குவித்து வரும் நிலையில், இந்த போட்டோவைப் பார்த்த பேன்ஸ் பட்டனை போடுங்க மேடம் என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். நடிகை சமந்தா நேற்று இதே போல, உள்ளாடை இல்லாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்து இருந்தார். இந்த போட்டோ டிரெண்டான நிலையில், தற்போது ராஷி கன்னாவும் அதே போல போஸ் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











