டிக்கெட் விற்ற ராஷி கண்ணா.. முண்டியடித்த ரசிகர் கூட்டம்
ஹைதராபாத்: 'பிரதி ரோஜு பன்டாகே' என்ற தெலுங்கு படம் நேற்று வெளியானது இந்த படத்திற்கான டிக்கெட்டை ராஷி கண்ணாவே விற்றார். பட விளம்பரத்தின் ஒரு புதிய முயற்சியாக இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளது படக்குழு.
ஹிந்தி,தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தற்போது வளர்ந்து வரும் நடிகை தான் ராஷி கண்ணா. ஹைதராபாத்தை சேர்ந்த ராஷி கண்ணா ஹிந்தியில் 2013ல் வெளியான 'மெட்ராஸ் கபே' படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் .

அதன்பின் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த மனம் படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்து இருப்பார் ராஷி கண்ணா. அதன் பின் தெலுங்கில் பல படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா தமிழில் அடங்கமறு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் . அந்த படம் வெற்றிப்படமாக ஆனதை அடுத்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அதிகரித்தது.
அதற்கு பிறகு அயோக்யா, சங்கத்தமிழன் என அடுத்தடுத்த படங்களில் தமிழில் பிசியாக நடித்தார் ராஷி. இவர் அடுத்ததாக 'சைதான் கீ பச்சா ' என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறாராம்.

தற்போது ராஷி கண்ணா தெலுங்கில் பிரதி ரோஜு பன்டாகே எனும் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்த வித்தியாசமான யுத்தியில் இறங்கியது படக்குழு. ஹைதராபாத்தில் உள்ள கோகுல் திரையரங்கில் நடிகை ராஷி கண்ணாவே படத்திற்காக டிக்கெட்டுகளை விற்றார். ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து ராஷி கண்ணாவிடம் டிக்கெட்டை வாங்கி சென்றார்கள் .
ராஷி கண்ணா இந்த படத்தில் ஏஞ்சல் ஆர்னாவாக நடிக்கிறார். சத்யராஜ் கேன்சர் நோயாளியாக நடிக்கிறார். தனது கடைசி காலத்தை தன் உறவுகளுடன் கழிக்க நினைக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் சத்யராஜ்.
பிரிதி ரோஜு பன்டாகே படத்தில் சாய் தர்ம தேஜ், ராஷி கண்ணா, சத்யராஜ் மற்றும் ரவோ ராஜ்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார். இந்த இப்படத்தை இன்று திரையரங்குகளில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











