Rashi khanna: மிகுந்த மனஅழுத்தம்.. சொல்ல முடியாத வலி.. காதல் தோல்வி குறித்து மனம் திறந்த ராஷி கன்னா!
சென்னை: மெட்ராஸ் கபே படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராஷி கன்னா. அதைத்தொடர்ந்து ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் குறுகிய காலத்திலேயே ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகையாக மாறிய ராஷிகன்னா காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

தமிழில் இமைக்கா நொடிகள் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ராஷி கன்னா. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். மேலும், தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கிய ஃபார்ஸி என்ற வெப் தொடரில் ஷாகித் கபூர், விஜய்சேதுபதி, கேகே மேனன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோருடன் ராஷி கன்னா நடித்திருந்தார். 8 எபிசோடுகள் கொண்ட தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி பாராட்டை பெற்றது.

கைவசம் உள்ள படம்: நடிகை ராசி கன்னா தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட அரண்மனை 4 படத்தில் தமன்னாவுடன் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வசூலை அள்ளியது. தற்போது ராஷி கன்னா, இந்தியில் 'தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற படத்தில் அவர் நடித்துள்ளார்.தீரஜ் சர்ணா இயக்கும் இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் இன்று தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த படம் மட்டுமில்லாமல் தெலுங்கு படம் ஒன்றிலும், தமிழில் Aghathiyaa என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மிகவும் மோசமான காலம்: 'தி சபர்மதி ரிப்போர்ட்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராஷி கன்னா, ப்ரேக் அப் ஏற்பட்ட போது மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். அந்த கால கட்டம் எனது வாழ்க்கையின் மிகவும் மோசமான கால கட்டமாக இருந்தது. நண்பர்களும், அவர்கள் என் மீது வைத்திருந்த அன்பும் தான் நான் மன அழுத்தத்தில் இருந்தும், மனச் சோர்விலிருந்து வெளியே வர உதவியது. நண்பர்கள் கொடுத்த அறிவுரைப்படி நடிப்பின் மீது கவனம் செலுத்தினேன்.

அப்போது தான் தெலுங்கில் எனது முதல் படம் வெளியானது. அதைத்தொடர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி சொன்னேன். வெளியில் வந்த போது, அங்கு மக்கள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். கூட்டத்தில் இருந்து என்னை வெளியே அழைத்துவர பாதுகாவலர்கள் கஷ்டப்பட்டனர். அந்த சம்பவத்தை எப்போதும் என்னால் மறக்க முடியாது. ஒரு நடிகைக்கு இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று அதற்கு முன்பு எனக்கு தெரியாது. அதன் பிறகு நடிப்பை மட்டும் தான் காதலித்து வருகிறேன் என்று ராஷி கன்னா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











