“ப்ளீஸ் ஸ்டாப்“… தவறா பேசாதீங்க… இன்ஸ்டாவில் புலம்பிய ராஷி கண்ணா !

சென்னை : ராஷி கண்ணா இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

ராஷி கண்ணா தற்போது தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், கார்த்தி நடிப்பில் சர்தார், சைத்தான் கா பச்சா,மேதாவி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப்படங்களிலும் படு பிஸியாக நடித்து வருகிறார்.

ராஷி கண்ணா

ராஷி கண்ணா

வெண்ணையில் செய்த சிலை போல பார்ப்பதற்கு அம்சமாக இருப்பவர் ராஷி கண்ணா. தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர், இந்தியில் மெட்ராஸ் கபே என்ற படத்தில் துணை நடிகையாக நடித்து தனது அறிமுகத்தை கொடுத்தார். இதேபோல டோலிவுட்டி ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற படத்தில் அறிமுகமானார்.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

ஒரு சில படத்திலே டாப் நடிகை ரேஞ்சுக்கு பிரபலமான ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலே எக்கச்சக்க ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார் ராஷிகண்ணா. அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

கடுமையாக விமர்சித்தார்

கடுமையாக விமர்சித்தார்

இந்தியில் அவர் பல பட வாய்ப்புகளைப் பெற்று வருவதால் தென்னிந்திய சினிமா படங்களை மறுப்பதாகவும் இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, வெறும் அழகு பதுமையாகவே பெண்கள் பார்க்கப்படுவதாக ராஷிகண்ணா நேர்காணலில் கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இதனால், தென்னிந்திய ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

"ப்ளீஸ் ஸ்டாப்"

இந்நிலையில், ராஷிகண்ணா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தென்னிந்திய சினிமாவை பற்றிய நான் பேசியதாக சில தவறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. யாராக இருந்தாலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.. ப்ளீஸ் ஸ்டாப். நான் நடிக்கும் ஒவ்வொரு மொழியின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அன்பாக இருப்போம் என ராஷி கண்ணா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X