For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரசிகர்கள் காதல் சொன்னால் என்னோட ரியாக்ஷன் இதுதான்.. நடிகை ராஷி கன்னா ஓப்பன் டாக்!

  |

  சென்னை: இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக மாறியுள்ள நடிகை ராஷி கன்னா ரசிகர்களின் 'லவ் புரொபசல்ஸ்' குறித்து ஜாலியாக அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது.

  வரும் விநாயகர் சதுர்த்திக்கு சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ள விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ராஷி கன்னா.

  அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் பிரபல டிவி சேனலில் வாய்ப்பு? ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அனிதா சம்பத்! அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் பிரபல டிவி சேனலில் வாய்ப்பு? ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அனிதா சம்பத்!

  ஆயுத பூஜைக்கு ரிலீசாக உள்ள ஆர்யாவின் அரண்மனை 3 படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

  பட மழை

  பட மழை

  நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா மேலும் ஏகப்பட்ட தமிழ் படங்களில் தொடர்ந்து கமீட் ஆகி நடித்து வருகிறார்.

  லேட்டஸ்ட் கிரஷ்

  லேட்டஸ்ட் கிரஷ்

  துக்ளக் தர்பார், அரண்மனை 3 என தொடர்ந்து புதுப் படங்களில் கமீட் ஆகி உள்ள ராஷி கன்னா தான் இன்றைய இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆக உள்ளார். அத்தனைக்கும் காரணம் சமீபத்தில் அவர் நீச்சல் குளத்தில் கருப்பு பிகினியில் வெளியிட்ட அந்த கவர்ச்சி புகைப்படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  இன்ஸ்டாகிராம் இளவரசி

  இன்ஸ்டாகிராம் இளவரசி

  இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சிகரமான போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வரும் நடிகை ராஷி கன்னா இன்ஸ்டாகிராமின் இளவரசியாகவே மாறியுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 7.2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். விரைவில் 10 மில்லியனை தாண்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  Recommended Video

  Suriya dual role in vetrimaran Vadivaasal • Aruva, Hari
  17 வயதில் புரொபஸல்

  17 வயதில் புரொபஸல்

  நடிகை ராஷி கன்னாவுக்கு 17 வயசு இருக்கும் போது, முதன் முறையாக சீனியர் ஒருவர் காதல் கடிதம் மற்றும் ரோஜாப்பூவை கொடுத்து படு ரொமான்டிக்காக புரொபஸ் செய்தாராம். ஆனால், அப்போது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதனை நான் கொஞ்சம் டென்ஷனாகவே ரிஜெக்ட் செய்தேன். ஆனால், அதன் பிறகு அவருடன் டச்சில் இல்லை என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

  பும்ராவுடன் காதல் வதந்தி

  பும்ராவுடன் காதல் வதந்தி

  திரைக்கு வந்த ஆரம்ப காலத்தில் டோலிவுட் நடிகர் நாக சூர்யாவுடன் இணைத்து பேசப்பட்ட நடிகை ராஷி கன்னா அதன் பின்னர் இந்திய அணியின் பந்து வீச்சாளர் பும்ராவுடன் டேட்டிங் சென்று வருவதாக வதந்திகள் கிளம்பின. கிரிக்கெட் வீரர் பும்ராவின் பந்து வீச்சு ரொம்ப பிடிக்கும் என ஒரு பேட்டியில் சொன்னதன் விளைவு தான் இப்படி ஒரு காதல் வதந்தி கிளம்ப காரணம் ஆனது என மற்றொரு பேட்டியில் கூறிய ராஷி கன்னா ஒரு தடவை கூட பும்ராவை நேரில் சந்தித்தது கூட கிடையாது என தடலாடியாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

  ரசிகர்கள் புரொபஸல்

  ரசிகர்கள் புரொபஸல்

  நடிகர்கள் என்றாலே இது போன்ற காதல் புரொபஸல்கள் செல்லும் இடங்களில் எல்லாம் வந்து குவிவது காலம் காலமாகவே நடந்து வருகிறது. அதிலும், நடிகைகளை பார்த்தால் ரசிகர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் போட்டி போட்டுக் கொண்டு புரபோஸ் செய்வது வழக்கம். நடிகை ராஷி கன்னாவுக்கும் இப்போ ஏகப்பட்ட காதல் புரொபஸல்கள் வருகிறதாம்.

  என்னிடம் காதலை சொன்னால்

  என்னிடம் காதலை சொன்னால்

  ரசிகர்கள் நேரிலோ அல்லது கடிதங்கள் அல்லது சோஷியல் மீடியா வழியாகவோ என்னிடம் காதலை சொல்லி வருகின்றனர். என்னை ரசிகர்கள் ரசிப்பதே எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் நிலையில், ரசிகர்கள் செய்யும் காதல் புரொபஸல்களும் மகிழ்ச்சியைத் தான் தருகிறது. அதனால், அவர்கள் மனம் கோணாதபடி அந்த புரொபஸல்களை நாசுக்காக கையாண்டு மறுத்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

  English summary
  Actress Raashi Khanna opens up about fans love proposals and what she actually do or response for their proposals in a recent interaction.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X