யாரையும் காதலிக்கவில்லை.. நான் சிங்கிள்தாங்க.. ரசிகர்களிடம் போட்டுடைத்த பிரபல நடிகை!
சென்னை: தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தான் சிங்கிள்தான் என்று ரசிகர்களிடம் மனம் திறந்துள்ளார் பிரபல நடிகை.
பிரபல பாடகி மற்றும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கன்னா. இந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா, தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இமைக்கா நொடிகள்
தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமான ராஷி கன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம், மேதாவி, சைத்தான் கே பச்சா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

பெரும் ரசிகர் பட்டாளம்
சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ராஷி கன்னா, அடிக்கடி தனது க்யூட் அன்ட் ஹாட்டான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இதனால் ராஷி கன்னாவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

பாய் ஃபிரண்ட் இல்லை
மேலும் தனக்கு ஆண் நண்பர் இல்லை என்பதை ரசிகர்களுக்கு தெளிவுபடுத்தினார் நடிகை ராஷி கன்னா. இந்த உரையாடலில் பேசிய ராஷி கன்னா தனது வாழ்க்கைத் துணையை கண்டுபிடித்தவுடன் அறிவிப்பதாகவும் ரசிகர்களுக்கு உறுதியளித்தார்.

பிடித்த நடிகை நயன்தாரா
மேலும் கோலிவுட்டில் தனக்கு பிடித்த நடிகர் விஜய் என்றும் பிடித்த நடிகை நயன்தாரா என்றும் குறிப்பிட்டார் நடிகை ராஷி கன்னா. நடிகை ராஷி கன்னாவுக்கு ஐந்து மொழிகள் அத்துப்படி. அதனாலேயே அவர் அனைத்து மொழிகளிலும் வெற்றி நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications