ஆப்பிள் பழம் போல பளபளன்னு மின்னும் ராஷி கண்ணா!
சென்னை: யாரடி நீ மோகினி வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் திருசிற்றம்பலம் திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார்
விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன்,துக்ளக் தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷி கண்ணா இப்பொழுது ஆப்பிள் பழம் போல பளபளன்னு மின்னும் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

முன்னணி நடிகையாக
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக முன்னேறி இருக்கும் நடிகை ராஷி கண்ணாவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டுள்ளார். இவர் இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் ஆகிய படங்களில் நடித்தார்.

கலகலப்பாக ஹாரர் திரைப்படமாக
கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை3 நடித்திருந்த அந்த படம் கலகலப்பான ஹாரர் திரைப்படமாக வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நடிகர் ஆர்யா இந்த படத்தில் வித்தியாசமாக பேயாக நடித்து இருந்தார். நடிப்பு கவர்ச்சி காமெடி என அனைத்திலும் கலக்கிய ராஷி கண்ணா இந்த படத்தில் ரசிகர்களிடையே தனி கவனத்தைப் பெற்றார்

மூன்றாவது முறையாக கூட்டணியில்
சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக ராஷி கண்ணா இணைந்துள்ளார். தி ஃபேமிலி வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் அடுத்ததாக இந்தியில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள வெப் சீரிஸில் விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூரும் இணைந்து நடிக்க கதாநாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜவஹர் இயக்கத்தில் தனுஷ்
யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் திருச்சிற்றம்பலம். கிராமத்து பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா என இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதுதவிர சைத்தான் கே பச்சா,மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
Recommended Video

பளபளன்னு மின்னும் அழகி
இவ்வாறு படங்களில் ஒருபுறம் பிசியாக நடித்து வந்தாலும் மறுபுறம் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ராஷி கண்ணா இப்பொழுது ஆப்பிள் பழம் போல அழகில் பளபளன்னு மின்னும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிறது.


Click it and Unblock the Notifications











