புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது.. மாஸ்கோவில் பனியில் ஷூட்டிங்.. ராஷி கண்ணாவின் க்யூட் பிக்ஸ்!!

சென்னை : விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன்,துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இந்தியில் புதிய வெப் தொடரிலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ராஷி கண்ணா

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தேங்க்யூ என்ற ரொமான்டிக் காதல் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மாஸ்கோவில் நடைபெற்று வர அங்கு பனிப் பொழிவில் நடுங்கியவாறு ராஷி கண்ணா எடுத்த அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா,விஜய் சேதுபதி,அதர்வா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா அதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் திரைப்படங்களில் முக்கியமாக இடம்பிடித்தார் . குறிப்பாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சங்கத்தமிழன் மற்றும் துக்ளக் தர்பார் என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து இப்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில்

பிரம்மாண்ட பொருட்செலவில்

ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்கிய டீகே மற்றும் ராஜ் இயக்கத்தில் ஹிந்தியில் மிக பிரமாண்ட வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. அதில் ஷாகித் கபூர் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க கதாநாயகியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது என கூறப்படுகிறது.

உருக வைக்கும் ரொமாண்டிக் காதல் படமாக

உருக வைக்கும் ரொமாண்டிக் காதல் படமாக

தென்னிந்தியாவில் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மிக பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போது நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தேங்க்யூ என்ற படத்தில் நடித்து வருகிறார். உருக வைக்கும் ரொமாண்டிக் காதல் திரைப்படமாக உருவாகி வரும் தேங்க்யூ படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.

Recommended Video

Arya உடன் மீண்டும் நடிக்க ஆசைப்பட்ட Rashi Khanna | Aranmanai 3, Arya
பனி பொழிவிற்கு நடுவே நிற்கும் வெள்ளை பூ

பனி பொழிவிற்கு நடுவே நிற்கும் வெள்ளை பூ

கடும் குளிரிலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் படப்பிடிப்பு தளத்தில் பனி பொழிவிற்கு நடுவே நிற்கும் வெள்ளை பூ போல ராஷி கண்ணா செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்க அவை வைரலாகி வருகின்றன. தேங்க்யூ வரும் சம்மருக்கு ரிலீசாக உள்ளது. இந்த படத்தை சூர்யாவின் 24 படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கி வருகிறார். ராஷி கண்ணா இப்பொழுது தமிழில் சர்தார் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X