Raashi Khanna: இது ஒன் வீக் தாங்கும்.. புடவையில் ராஷி கண்ணா அசத்தல் போட்டோஸ்!
சென்னை: க்யூட் நடிகையான ராஷி கன்னா, மெட்ராஸ் கபே படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார், மெகா ஹிட் படமான அரண்மனை 4ம் பாகத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
நடிகை ராஷி கன்னா, அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் என அடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹிட் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார்.

ஃபார்ஸி : தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கிய ஃபார்ஸி என்ற வெப் தொடரில் ஷாகித் கபூர், விஜய்சேதுபதி, கேகே மேனன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோருடன் ராஷி கன்னா நடித்திருந்தார். 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரில், பணம் மனிதனை எந்தளவுக்கு மோசடிக்காரர்களாக மாற்றுகிறது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். இந்த தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி பாராட்டை பெற்றது.

கதைதான் முக்கியம்: நடிகை ராசி கன்னா தமிழில் கார்த்திக்குடன் இணைந்த சர்தார் படத்தில் நடித்திருந்தார். தற்போது, யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தி தொலைக்காட்சி அதிகம் தென்படும் ராஷி கண்ணா, அழகை மட்டுமே நம்பி இருந்தால் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாது. ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவும், பட வாய்ப்புகளை அதிகரிக்கவும் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது முக்கியம் என்றார்.

போட்டோஷூட்: இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் இவர், தற்போது கருப்பு நிற உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த உடைக்கு மேட்சாக சிகை அலங்காரம் என அனைத்தையும் பக்காவாக செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது. நடிகை ராஷி கண்ணா அண்மையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அரண்மனை 4 படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டில் அதிக வசூலை அள்ளிய படமாக இருந்தது.



Click it and Unblock the Notifications











