Raashi Khanna: குட்டி இளவரசி.. கைக்குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட ராஷி கண்ணா!

சென்னை: நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவரது கேரக்டர் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவரும் ராஷி கண்ணா, அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 11 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கையில் குழந்தையுடன் ராஷி கண்ணா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Raashi khanna Aranmanai 4 Director Sundar C 4

நடிகை ராஷி கண்ணா: நடிகை ராஷி கண்ணா தொடர்ந்து தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா உள்ளிட்டவர்கள் நடித்த இமைக்கா நொடிகள் படம் மூலம் இவரை தமிழில் அறிமுகம் செய்து வைத்தனர். இந்த படம் இவருக்கு மிக சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன், ஜெயம் ரவியுடன் அடங்கமறு உள்ளிட்ட படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் சுந்தர் சியுடன் ராஷி கண்ணா, தமன்னா இணைந்து நடித்து வெளியான அரண்மனை 4 படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.

அரண்மனை 4 படம்: இந்த படத்தில் ராஷி கண்ணாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தில் மருத்துவராக நடித்துள்ள ராஷி கண்ணாவுக்கு, படத்தில் குறைவான காட்சிகளே இருந்தபோதிலும் ஹாரர் படமான அரண்மனை 4 படத்தில் இவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ராஷி கண்ணா நடித்து வரும் சூழலில் சமூக வலைதளங்களிலும் இவர் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை 11 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷி கண்ணா வெளியிட்டு வருகிறார்.

லேட்டஸ்ட் போட்டோஸ்: இந்நிலையில் ராஷி கண்ணாவின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகின்றன. இந்த படங்களில் கையில் கைக்குழந்தையுடன் ராஷி கண்ணா காணப்படுகிறார். தன்னுடைய அண்ணனின் குழந்தையை தான் ராஷி கண்ணா தாலாட்டியபடி வைத்து கொண்டிருக்கிறார். எங்கள் வீட்டின் குட்டி இளவரசி என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் என்னம்மா ப்ராக்டிசா என்பது போல பல வகையான கமெண்ட்களால் அவரை திணற வைத்துள்ளனர்.

கவர்ச்சிக்கு முக்கியத்துவம்: கடந்த 2013ம் ஆண்டில் மெட்ராஸ் கபே என்ற படத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ராஷி கண்ணா. தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய படங்களில் அதிகமான கவர்ச்சியை கொடுத்து ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார். இதன்மூலம் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்து வருகின்றன. தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் அடுத்தடுத்த கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X