முதல் இரவுல என்ன செஞ்சீங்க? பத்திரிக்கையாளரை அலறவைத்த நடிகை ரச்சிதா ராம்.. கொதிக்கும் பிரபலங்கள்!
சென்னை: முதல் இரவில் நீங்கள் என்ன செய்தீர்கள் என பத்திரிகையாளரிடம் பிரபல நடிகை கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் நடிகை ரச்சிதா ராம். முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார்.
டிம்பிள் குயின் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது லவ் யூ ரச்சு என்ற படத்தில் நடித்துள்ளார்.

முதல் இரவில் என்ன செய்தீர்கள்?
விரைவில் திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் செய்தியாளரிடம் நீங்கள் முதல் இரவில் என்ன செய்தீர்கள் என்று கேட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

லவ் யூ ரச்சு..
அதாவது, உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிப்பது குறித்து செய்தியாளர் ரச்சிதாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கேள்வியாக நடிகை ரச்சிதா ராம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார். விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள 'லவ் யூ ரச்சு' படத்தில் 'தைரியமான' சில காட்சிகள் திரைக்கதைக்கு தேவைப்பட்டன என்றும் கூறியிருந்தார்.

கல்யாணத்துக்குப் பிறகு என்ன செய்வார்கள்?
மேலும் "இங்கே நிறைய பேர் கல்யாணம் ஆனவங்க இருக்காங்க. யாரையும் சங்கடப்படுத்தற எண்ணம் எனக்கு இல்லை. பொதுவாக, நான் உங்களைக் கேட்கிறேன், கல்யாணத்துக்குப் பிறகு என்ன செய்வார்கள்? என்றும் கேட்டார்.

அதுதான் படத்தில் காட்டப்பட்டுள்ளது
ரச்சிதாவின் இந்த அதிர்ச்சி கேள்வியில் இருந்து பத்திரிக்கையாளர்கள் மீண்டு வருவதற்குள் அவரே அதற்கான பதிலையும் கூறினார். திருமணத்திற்கு பிறகு ரொமான்ஸ் செய்வார்கள் இல்லையா? அதுதான் படத்திலும் காட்டப்பட்டுள்ளது என்றார்.

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்நிலையில் ரச்சிதா செய்தியாளரிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டதற்கு பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகை ரச்சிதாவின் பேச்சுக்கு கன்னட கிராந்தி தளம், கண்டனம் தெரிவித்துள்ளது. தனது கருத்துக்கு நடிகை ரச்சிதா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நடிகையை தடை செய்யுமாறு கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிடம் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
Recommended Video

மாநிலத்தின் இமேஜை சேதப்படுத்தியுள்ளது
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தேஜஸ்வி நாகலிங்கசாமி, ரச்சிதாவின் கருத்து மாநிலத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும், மாநிலத்தின் இமேஜை சேதப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











