பேய் படத்தில் ரச்சிதா மகாலட்சுமி.. முகத்திலேயே பயம் தெரியுதே? 'பயர்' படம் மாதிரி சீன் இருக்குமா?
சென்னை: சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் "99/66" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா, தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீரியல்களில் நடித்துக்கொண்டு இருந்த ரச்சிதா மகாலட்சுமி, 2015-ஆம் ஆண்டு வெளியான 'உப்புக் கருவாடு' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். மீண்டும் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என நினைத்த ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும், தினம் தினம் புடவையில் வந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி: பிக் பாஸ் நிகழ்ச்சி பின் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் பிசியாக நடித்துவரும் அவர், 'பயர்', 'எக்ஸ்ட்ரீம்' போன்ற படங்களில் தனது நடிப்பால் பாராட்டுகளை பெற்றார். பயர் திரைப்படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். அதைப்பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவை திட்டி தீர்த்தனர். அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத ரச்சிதா மகாலட்சுமி, இயக்குநர் எம்.எஸ். மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் '99/66' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சபரி, ரோகித், ஸ்வேதா, பவன்கிருஷ்ணா, கே.ஆர். விஜயா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
"99/66" பர்ஸ்ட் லுக்: அமானுஷ்யம் நிறைந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காணப்படும் மர்மமான காட்சிகளும், ரச்சிதா மகாலட்சுமியின் லுக்கும் படத்தின் கதைக்களம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் ஆர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











