Rachitha: அம்மணிக்கு இன்னும் ‘ஃபயர்‘ மூட் போகலையோ.. எசகுபிசகா போஸ் கொடுத்த ரச்சித்தா மகாலட்சுமி!
சென்னை: அழகான கண்ணு, உதட்டிற்கு மேல் இருக்கும் மச்சம் என தனது அழகாலும், நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சின்ன திரை முதல் பெரிய திரை வரை தடம் பதித்து வரும் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் "ஆஹா, ஓஹா" என புகழ்ந்து வருகின்றனர்.
பெங்களுரில் பிறந்த ரச்சித்தா மகாலட்சுமி, கன்னட சீரியல் ஒன்றில் நடித்தன் மூலம் பிரபலமானார். இதையடுத்து, விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்கிற சீரியலில் நடித்தார். அந்த சீரியலை தொடர்ந்து, இளவரசி, மசாலா குடும்பம் போன்ற தொடர்களில் நடித்து வந்த இவரை பிரபலமாக்கியது 'சரவணன் மீனாட்சி 2' சீரியல் தான். இந்த சீரியலில் மீனாட்சி என்கிற ரோலில் நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.

ரச்சித்தா மகாலட்சுமி: இதைத்தொடர்ந்து, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த ரச்சித்தாவிற்கு, கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து உப்புக்கருவாடு படத்தில் கதையின் நாயகியாக நடித்தார். இவருக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு வரவில்லை என்றாலும், ஆண்டுக்கு ஒரு படம் என நடித்துக்கொண்டே இருந்தார். அந்த வாய்ப்பை அதிகரிக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்.

குவியும் லைக்ஸ்: பிக் பாஸ் வீட்டில் புடவை, மூக்குத்தி என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த ரச்சித்தா, 'ஃபயர்' படத்தில் வரும் மழை பாடலில், வெறும் சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு தாறுமான கவர்ச்சியை காட்டி இருந்தார். இப்பார்த்து சிலர் விமர்சனத்தை வைத்தாலும், சிலர் ரச்சித்தாவின் அழகில் சொக்கிப்போனார்கள். தற்போது, கணிசமான படங்களை கையில் வைத்து இருக்கும் ரச்சித்தா, தனது ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதை கடமை என நினைத்து, தொடர்ந்து தனது புது புது லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டு இருக்கும் போட்டோவில் சட்டை பட்டனை கழட்டி விட்டு, எசகுபிசகா போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அம்மணிக்கு இன்னும் 'ஃபயர்' மூட் போகலையோ கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த போட்டோ வெளியான சில மணி நேரத்திலேயே லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











