நீங்க ஒருத்தர் போதும்.. மொத்த ஹீரோயினுக்கும் நோ மார்க்கெட்.. ரச்சித்தாவின் போட்டோஸ்!

சென்னை: ஃபயர் படத்திற்கு பிறகு ரச்சித்தா மகாலட்சுமி வேறலெவலுக்கு போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஃபயர் படத்தில் மழையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ரச்சித்தாவிற்கு என்றே தனிக்கூட்டம் ஒன்று உள்ளது. அந்த ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கும் இவர், இணையத்தில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி சீரியலில் கிராமத்து பெண்ணாக நடித்து இருந்தார் ரச்சிதா மகாலட்சுமி. அந்த சீரியல் வெற்றி பெற்றததைத் தொடர்ந்து, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடித்து வந்த ரச்சித்தாவிற்கு, கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் கோலிவுட்டில் உப்புக்கருவாடு படத்தில் நாயகியாக நடித்தார்.

ரச்சித்தா மகாலட்சுமி: இப்படி ஒரு சில படத்தில் நடித்து வந்த ரச்சித்தா, தனது பட வாய்ப்பை அதிகரிப்பதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரின் அமைதியான முகமும், கனிவான பேச்சும் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. இந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர், ரச்சித்தாவை சைட் அடித்துக்கொண்டு, மூக்குத்தி மூக்குத்தி என அவரின் பின்னால் சுற்றிய போதும், ரச்சித்தா அவரை கண்டுகொள்ளாமல், தன் விளையாட்டிலேயே கவனமாக இருந்தார். அதுமட்டுமில்லாமல், கடுமையான சைக்கிள் டாஸ்கையும் மிகவும் சிறப்பாக செய்து முடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும், பணமும் வந்தது.

Rachitha Mahalakshmi photos
Photo Credit:

ஃபயர்: ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழால், கன்னடத்தில் ரங்கநாயகா, தமிழில் எக்ஸ்ட்ரீம், தள்ளிமனசு ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஆனால், பட வாய்ப்பு இல்லாமல், அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு, எப்படியாவது படத்தில் நடித்தால் போதும் என்று இருந்த நேரத்தி ஃபயர் என்ற படத்தில் நடித்திருந்தார். ஜே.எஸ்.சதீஷ் குமார் தயாரித்த இந்த படத்தில், மீனாட்சி என்ற ரோலில் மாவு விற்கும் பெண்ணாக ரச்சித்தா நடித்திருந்தார். தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில், வெறும் ஷர்ட் மட்டுமே அணிந்து கொண்டு, பாடல் முழுக்க ஒரே கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இந்த பாடல் வெளியானதும், இந்த பாடலைப்பார்த்த பலர், ரச்சித்தாவா இப்படி நடித்தார் என பலர் அவரை வசைபாடினார்கள்.

வெளிநாட்டில் ஆட்டம் போடும் ரச்சித்தா: படம் வெளியாவதற்கு முன்பே ஃபயர் பட இயக்குநருடன் ரச்சித்தாவின் பிறந்த நாளுக்கு வெறும் சட்டையுடன் இருக்கும் போட்டோவை போட்டு, இயக்குநர் வாழ்த்து சொல்லி இருந்தார். இதனால், கடுப்பான ரச்சித்தா, பிறந்த நாளுக்கு இப்படியா வாழ்த்து சொல்வது என அவரை கடுமையாக திட்டினார். இந்த பிரச்சனையால், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூட ரச்சித்தா வரவில்லை. ஆனால், ஃபயர் கணிசமான நல்ல வசூலை அள்ளியது. இந்த படத்தில் நடித்தால், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தான் சொல்லும் அளவிற்கு அவருக்கு தொடர்ந்து படவாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது. இணையத்தில் எப்போதும், ஆக்டிவாக இருக்கும் ரச்சித்தா, வெளிநாட்டுக்கு ஜாலியாக டூர் சென்றுள்ளார். தற்போது, இவர் பீச்சில் ஆட்டம் போட்டுள்ள வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X