Rachitha Mahalakshmi: அழகென்றால் இவள் தானே.. கண்ணுக்கு விருந்தளிக்கும் ரச்சிதா மகாலட்சுமி!

சென்னை: 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பிரபலமான ரச்சித்தா மகாலட்சுமி. சின்னத்திரை மட்டுமின்றி, வெள்ளித்திரையிலும் தனது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ள ரச்சித்தா, தற்போது சமூக வலைதளங்களிலும் அதிக ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், அவர் சமீபத்தில் மலேஷியா பயணத்தின் போது எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மலேஷியாவின் புகழ்பெற்ற அடையாளமாக விளங்கும் இரட்டை கோபுரங்கள் முன் நின்று, விதவிதமான கோணங்களில் ஸ்டைலாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை நடிகை ரச்சித்தா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.போட்டோவை பார்த்த ரசிகர்கள் "அழகின் மறுபெயர்", "ஸ்டைலிஷ் குயின்", "வெளிநாட்டு லுக் சூப்பர்" போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Rachitha Mahalakshmi instagram
Photo Credit:

நடிகை ரச்சித்தா மகாலட்சுமி: நடிப்புத் திறமையாலும், எளிமையான தோற்றத்தாலும் இல்லத்தரசிகள் மத்தியில் தனி இடம் பிடித்த ரச்சித்தா, இதுவரை பல பல வெற்றித் தொடர்களில் நடித்துள்ளார். இதில் இவர் நடித்த 'சரவணன் மீனாட்சி' தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து 'பிரிவோம் சந்திப்போம்', 'நாச்சியார்புரம்', 'இடையாற்று மங்கை' போன்ற தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை வெற்றிக்கு பிறகு, ரச்சித்தா வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கினார். 2015ஆம் ஆண்டு வெளியான 'உப்புக் கருவாடு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 'பயர்', 'எக்ஸ்ட்ரீம்' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் சினிமா ரசிகர்களிடமும் கவனம் பெற்றார்.

குளுகுளு போட்டேஸ்: தற்போது நடிகை ரச்சித்தா மகாலட்சுமியை இன்ஸ்டாகிராமில் 1.7 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தனது வாழ்க்கை தருணங்கள், பயண அனுபவங்கள், போட்டோஷூட் படங்கள் என அனைத்தையும் ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்வதால், சமூக வலைதளங்களில் அவர் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறார். தற்போது இவர் பகிர்ந்து இருக்கும் மலேஷியா புகைப்படங்கள் 67 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

More from Filmibeat

Read more about: rachitha mahalakshmi instagram
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X