Rachitha Mahalakshmi: கூலர்ஸ்.. மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கல் போஸ்.. ஒரு முடிவோடத்தான் இருக்காங்க ரச்சிதா!

சென்னை: சினிமாவிற்கு இணையான கவனத்தை சின்னத்திரையும் தற்போது பெற்று வருகிறது. சினிமாவில் ஒரு படம் கொடுக்கும் அனைத்து சம்பவங்களையும் தற்போது சின்னத்திரை சீரியல்களும் கொடுத்து வருகின்றன. முன்பெல்லாம் சீரியலா அழுகாச்சியா இருக்கும், வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்ற நிலைமையை தற்போதைய சீரியல்கள் மாற்றி வருகின்றன. சினிமாவிற்கு இணையான ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையுமே சீரியல்கள் பெற்று வருகின்றன. தற்காலங்களில் சீரியலில் நடித்து அதன்மூலம் சினிமா என்ட்ரியை சிறப்பாக்கி வருகிறார்கள் சின்னத்திரை நட்சத்திரங்கள்.

சினிமாவில் நடிக்கும் நாயகிகளுக்கு இணையாக போட்டோஷுட்களை எடுத்து தங்களின் இன்ஸ்டாகிராம் பாலோயர்களை அதிகரித்துக் கொள்ளும் மனோபாவமும் சீரியல் நாயகிகளுக்கு மட்டுமில்லாமல் நாயகர்களுக்கும் காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது சீரியல்களில் இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார் பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்கள் மூலமும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ரச்சிதா மகாலட்சுமி. ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ள இவர், அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Actress Rachitha mahalakshmi new photoshoot pictures shared in Instagram

நடிகை ரச்சிதா மகாலட்சுமி: நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடர்மூலம் நடிப்பிற்குள் என்ட்ரி கொடுத்தவர். இந்தத் தொடர் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்ததுடன் அடுத்தடுத்த சிரியல் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. அடுத்ததாக நடித்த சரவணன் மீனாட்சி தொடரும் ரச்சிதாவின் கேரியரில் அற்புதங்களை செய்தது. இந்தத் தொடரில் மீனாட்சியாக அனைவரது மனங்களையும் கவர்ந்த ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து மூன்றாவது சீசனிலும் மீனாட்சியாக நடித்தார். இந்த சீரியல்களை தொடர்ந்து நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா: இதையடுத்து விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் பங்கேற்று தொடர்ந்து 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார். தொடர்ந்து விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். கடந்த 2015ம் ஆண்டில் தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ரச்சிதா. இந்த திருமணம் சில ஆண்டுகள்கூட நிலைக்கவில்லை. தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி. இதையொட்டி அடுத்தடுத்து கவர்ச்சியாக போட்டோஷுட்களையும் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

புதிய போட்டோஷுட்: கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளைத்தாமரை போல ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் புடவையில் போட்டோஷுட் எடுத்து பதிவிட்டு ஏராளமான லைக்ஸ்களை அள்ளினார். இந்நிலையில் தற்போது மாடர்ன் அவுட்பிட்டில் அடுத்த போட்டோஷுட்டை எடுத்துள்ளார். அழகான இந்த உடையில் தலையில் கொண்டை, காதில் வளையம், கண்ணில் கூலர்ஸ் சகிதம் கெத்து காட்டியுள்ளார். ரச்சிதாவின் இந்த அழகான மற்றும் ட்ரெண்டியான புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.


கன்னட மொழிப் படங்கள்: தற்போது கன்னட மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்துவருகிறார் ரச்சிதா. இவருக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து மௌனம் கலைக்காமல் உள்ளார் ரச்சிதா. முன்னதாக இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தினேஷ் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால் கடந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது, ரச்சிதா கண்டு கொள்ளவே இல்லை. மேலும் தினேஷுடனான பிரிவில் தான் உறுதியாக இருப்பதை அடுத்தடுத்து வெளிப்படுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X