தனிமை தான் சிறந்தது.. தனியாக இருக்கவே விரும்புகிறேன்..பல வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த ரச்சிதா!
சென்னை: பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்தபோது தினேஷுக்கும், ரச்சிதா மகாலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு 2021ம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டார்கள். தினேஷை பிரிந்ததில் இருந்து சிங்கிளாக இருந்து வரும் ரச்சிதா மகாலட்சுமி இரண்டாவது செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது பரவி வரும் வதந்திக்கு இந்த பேட்டியில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரச்சிதா மகாலட்சுமி: ரச்சிதா மகாலட்சுமி சென்னையில் புதிதாக வாங்கி இருக்கும் வீட்டின் ஹோம் டூர் கலாட்டா தமிழ் youtube சேனலில் ஒளிபரப்பானது. அதில், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த வீட்டை வாங்கினேன். சென்னையில் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்த போது, வேறு வழியே இல்லாமல் ரெடியாக இருந்தா இந்த வீட்டை வாங்கினேன். அதன் பிறகு தான் இந்த வீட்டில் ஒவ்வொன்றாக இன்டீரியல் டெக்கரேஷனை எனக்கு பிடித்தபடி நான் செய்து கொண்டேன். இதே வீட்டில் நான் எப்போதும் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறேன். அம்மா எப்போதாவது வருவார்கள் வந்த உடனே பெங்களூருக்கு சென்று விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இங்கு பேசுவதற்கு யாரும் இல்லை. அதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு இந்த வெதர் கண்டிஷன் செட் ஆகாததால் எப்பவாவது ஒரு முறை தான் வருவார்கள், ஏதாவது விசேஷம் என்றால் நான் பெங்களூருக்கு செல்வேன்.

தனியாக இருக்க விரும்புகிறேன்: என் வீடு, என் பூனை குட்டி இவை மட்டும்தான் என்னுடைய உலகம், பிக் பாஸ் வீட்டுக்குள் மூன்று மாதம் இருந்தேன். அதெல்லாம் எனக்கு பிரச்சனையே இல்லை. ஏன் என்றால்,இதே வீட்டிற்குள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வெளியே வராமல் தனியாக இருப்பேன். தனிமை என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, எவ்வளவு பெரிய கூட்டு குடும்பத்தில் இருப்பவர்களாக இருந்தாலும், எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் தனிமையாக்கப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால் நான் எப்போதுமே சிங்கிளாக தனிமையில் இருக்கவே விரும்புகிறேன். தவறாக படம் எடுப்பவர்கள், மார்ஃபிங் செய்து போட்டோக்களை மாற்றி வெளியிடுபவர்கள், நெகட்டிவ் எண்ணம் கொண்டவர்களை நான் தவிர்க்கவே விரும்புகிறேன் என ரச்சிதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











