Rachitha Mahalakshmi: இந்த விஷயம்தான் நான் உயிரோட இருக்க காரணம்.. ரச்சிதா மகாலட்சுமி உருக்கம்!

சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் சீரியல்களில் நடித்து, நடிப்பிற்கு என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மாஸான என்ட்ரியை கொடுத்த அவர், பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் என அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை விரிவாக்கிக் கொண்டார்.

தற்போது கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ரச்சிதா மகாலட்சுமி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் தான் நடித்து வரும் தள்ளி மனசு என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கேமராவை தொட்டு வணங்கி விட்டு தான் இன்னும் உயிருடன் இருப்பதற்கு தன்னுடைய தொழில்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Rachitha Mahalakshmi Instagram television

நடிகை ரச்சிதா மகாலட்சுமி: நடிகை ரச்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியவர். தமிழில் இவர் நடித்த சரவணன் -மீனாட்சி தொடர் மிகப்பெரிய என்ட்ரியை சின்னத்திரையில் கொடுத்தது. இந்நிலையில் அடுத்தடுத்து நாச்சியார்புரம், பிரிவோம் சந்திப்போம், நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய சீரியல்களில் நடித்து மாஸ் காட்டினார். இந்நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று 91வது நாள் வரை அதிரடியாக தன்னுடைய செயல்பாடுகளால் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தெலுங்கில் ரச்சிதா: பிக்பாஸ் நிகழ்ச்சியும் ரச்சிதாவின் ஃபேன் பேசை அதிகரித்தது. இந்நிலையில் சினிமாவிலும் அடுத்தடுத்து சிறிய சிறிய கேரக்டர்களின் நடித்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி. இவரது நடிப்பில் கன்னடத்தில் இந்த ஆண்டில் வெளியான ரங்கநாயக படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து ஐ லவ் யூ அபி என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழிலும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இதில் தெலுங்கில் தள்ளி மனசு என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

உயிருடன் இருக்கக் காரணம்: தள்ளி மனசு படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் கேமராவை தொட்டு வணங்கும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னை உயிருடன் வைத்துள்ளதே தன்னுடைய தொழில்தான் என்று பதிவிட்டுள்ளார். உண்மையாகவே தான் தனது வேலையை மட்டுமே நேசிப்பதாகவும் சினிமாவில் பணியாற்றுவதிலேயே தன்னுடைய விருப்பம் அதிகமாக இருப்பதாகவும் இதனால் கிடைக்கும் மன நிறைவு வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் ரச்சிதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார். தன்னுடைய இந்த வாழ்க்கைக்காக பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.


வெப் தொடரில் நடிக்கும் ரச்சிதா: எப்போதும் வேலை செய்வதற்கே தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார் ரச்சிதா. தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பதிவு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. நடிகர் தினேஷுடன் பிரிவை அறிவித்துள்ள ரச்சிதா, தொடர்ந்து அவருடன் இணைவாரா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தினார். ஆனால் அதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் ரச்சிதா தரப்பிலிருந்து காணப்படவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ரச்சிதா மகாலட்சுமி வெப் தொடர்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். இதன் மூலம் தன்னுடைய கேரியரை பிரகாசமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X