Don't Miss!
- News
பாஜகவிற்காக அதிமுக காத்திருக்கட்டும்.. கவலையில்லை.. போட்டுடைத்த நாராயணன்.. கொதிக்கும் "ரரக்கள்"
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கணவரை பிரிந்த ரச்சித்தாவிற்கு இரண்டாம் திருமணமா?.. அதுவும் அந்த இயக்குநருடனா?
சென்னை : கணவரை பிரிந்த சீரியல் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார்.
ஆயிரத்தில்
ஒருவன்
2
எப்போ
ஆரம்பம்..
செல்வராகவன்
சொன்ன
அசத்தல்
அப்டேட்..
அப்போ
ஹாட்ரிக்கா?

நடிகை ரச்சிதா மகாலட்சுமி
பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சித்தா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். கன்னடம், தெலுங்கு சீரியலில் நடித்து அனைவரும் பரீச்சியம் ஆனார். நடிகை ரச்சிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் நடித்தார்
இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் நடித்தார். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், விதவைப் பெண்ணாக நடித்து வருகிறார்.

கணவரை பிரிந்தார்
ரச்சித்தா கணவனை விட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், பேட்டி அளித்த ரச்சித்தா, இது சொல்ல மறந்த கதை சீரியலில் வரும் கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் ஒன்று என்றும், தான் தற்போது தனிமையில் இருப்பதாகவும், கதாபாத்திரத்தில் அந்த பெண்ணுக்கு இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலை சமாளிக்கும் முதிர்ச்சியும் தனக்கு இருப்பதாக ரச்சிதா கூறியிருந்தார். இந்த பேட்டிக்கு பின்பே அவர் உண்மையில் கணவரை பிரிந்து இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

இரண்டாவது திருமணமா?
இதையடுத்து, தற்போது நடிகை ரச்சித்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இவர்களுடைய திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்று விட்டதாகவும், ரச்சித்தா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அவர் ஒரு இயக்குநர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், யார் அந்த இயக்குநர் என்ற தகவல் தெரியவில்லை.