அடிக்கிற மழைக்கு கொடுக்குற போஸா இது? கதவு வச்ச ஜாக்கெட்டில்.. ரச்சிதா மகாலட்சுமியின் விதவித போஸ்!
சென்னை: சின்ன திரை முதல் பெரிய திரை வரை தடம் பதித்து வரும் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி, நடிப்பாலும், அழகாலும், டான்ஸ் ஸ்டெப்ஸாலும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியாகிய 'ஃபயர்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் மழையில் கவர்ச்சி ஆட்டம்போட்ட ரச்சித்தா, அப்படியே ரசிகர்களின் பார்வையில் ஹாட் டிரெண்டாகி விட்டார். குறிப்பாக அந்த பாடல் வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் ரச்சித்தாவிற்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி, தொடர்ச்சியாக அவரை பற்றிய மீம்ஸ்கள், ரீல்கள், கமெண்ட்ஸ் பொங்கிக் கொண்டே வந்தன.
இதை கவனித்த ரச்சித்தா,தனது ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது தான் தன் கடமை என நினைத்து, தொடர்ந்து தனது புது புது லுக்கில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு போஸும் வெளியான போதும் ஆயிரக்கணக்கான லைக்குகள், கருத்துகள், ஷேர்கள் குவிகின்றன.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி: அந்த வரிசையில் தற்போது ரச்சித்தா பகிர்ந்து உள்ள வெள்ளை புடவையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தலையில் மல்லிப்பூ வைத்துக்கொண்டு, அந்த புடவைக்கு பொருத்தமாக வெள்ள கல் பதித்த கம்பல் மற்றும் வளையல் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். ரச்சித்தாவின் அந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை மழைபோல் குவித்து வருகிறது. "எளிமையே அழகு", "அழகு கண்ணை விட்டு போகவே மாட்டேங்குது", "இன்னும் அடுத்த போட்டோக்களை எதிர்பார்க்கிறோம்" போன்ற கருத்துகளும் தாறுமாறாக ரச்சித்தாவின் ரசிகர்கள் பதிவிட்டு வந்த போது, சில விஷமிகள், இது ஜன்னல் வச்ச ஜாக்கெட் இல்ல கதவு வச்ச ஜாக்கெட் என பதிவிட்டுள்ளார்.
கவர்ச்சி போட்டோஸ்: ரச்சித்தா தற்போது பல படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் பணிபுரிந்து வருகிறார். அதே நேரத்தில் சமூக வலைதள ரசிகர்களுடனும் நெருக்கமான தொடர்பை பேணும் விதத்தில் ரீல்கள், போட்டோக்கள், புது லுக்குகள் ஆகியவற்றை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். பெங்களுரில் பிறந்த ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த சீரியலை தொடர்ந்து, பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி 2, நாச்சியார் என பல சீரியல்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











