Rachitha - நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.. அதிர்ச்சி கிளப்பிய நடிகை ரச்சிதா.. அப்படி என்ன ஆச்சு?
சென்னை: Rachitha (ரச்சிதா) நடிகை ரச்சிதா தான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய திரை கலைஞர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் கொண்டாடுவது வழக்கம். அதனை பயன்படுத்தி பலர் வளர்ந்திருப்பதும் இங்கு நடந்திருக்கிறது.

தமிழில் ரச்சிதா: அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமான ரச்சிதாவுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக தன்னுடைய கலரை மாற்றிக்கொண்டு நடித்தது பலரின் அப்ளாஸை அள்ளியது. அந்த சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடித்தார். அந்த சீரியல் ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது.
திருமணம்: இந்த சூழலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. கடந்த பல மாதங்களாக இரண்டு பேரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள்.
பிக்பாஸ் 6: நிலைமை இப்படி இருக்க பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாடிய அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார். அவர் வீட்டுக்குள் இருந்தபோது அவரிடம் ராபர்ட் மாஸ்டர் பேசிய விஷயங்கள் அனைத்துமே ட்ரெண்டாகின. மேலும் அவர்களை வைத்து பல மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டனர்.
படங்கள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு நடிகை ரச்சிதா சில படங்களிலும் நடித்துவருகிறார். அந்தவகையில் தற்போது அவர் Fire என்ற படத்திலும் நடித்துவருகிறார். அதில் அவரது லுக் கூட சமீபத்தில் வெளியானது. மேக்கப் எதுவும் இல்லாமல் இருந்த அவரது லுக்கை பார்த்த ரசிகர்கள் அட ரச்சிதாவா இது என்று ஆச்சரியமடைந்தார்கள்.
இறக்க வேண்டிய நேரம்: இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடற்கரையில் இருந்தபடி அவர் போட்டிருக்கும் போஸ்ட்டில், "நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே என் வாழ்க்கையை நான் விரும்பும்படி வாழ விடுங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ரச்சிதா எதற்காக இப்படி சோகமாக போஸ்ட் போட்டிருக்கிறார். அப்படி என்ன சோகம் நடந்துவிட்டது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதேபோல் பிக்பாஸ் 7ல் கலந்துகொண்டிருக்கும் அவரது முன்னாள் கணவர் தினேஷுடன் இனி சேர்வதற்கான வாய்ப்பே இல்லை என்பதை ரச்சிதா தனது பதிவுகள் மூலம் மறைமுகமாக உணர்த்திவந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











