ரீயூனியன் நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட ராதா.. இந்த வயசுல எவ்வளவு எனர்ஜி!
சென்னை : 80களில் பிரபல ஹீரோயினாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என வலம் வந்தவர் நடிகை ராதா.
தற்போதும் முன்னணி சேனல் ஒன்றில் இவர் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.
தற்போது நடைபெற்ற 80களின் ரீயூனியன் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராதா போட்ட குத்தாட்டம் குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

80களின் கனவுக்கன்னி ராதா
நடிகை ராதா 80களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இந்தியிலும் நடித்துள்ள இவர், கமல், ரஜினி, சிவாஜி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் இவர். தொடர்ந்து அடுத்தடுத்த பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தொடர்ந்து பிசியாக உள்ள ராதா
முன்னணி நடிகையாக வலம்வந்த ராதா, கடந்த 1991ம் ஆண்டில் ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ராதாவின் மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் சில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சொந்தத் தொழிலை கவனித்து வருகின்றனர். ராதா தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

80களின் ரீயூனியன் கொண்டாட்டம்
இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் 80களின் ரீயூனியன் கொண்டாட்டத்தில் தற்போது ராதா கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வந்த இந்த நிகழ்வு கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இந்த கொண்டாட்டம் மும்பையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ராதாவின் குத்தாட்டம்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதா, சிறப்பான குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நடனம் ஆடியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராதா, நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த சப்போர்ட் குறித்து தனது உற்சாகத்தை பகிர்ந்துள்ளார்.

சக நடிகர்களுக்கு நன்றி
இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, ஜாக்கி ஷெராப்,வெங்கடேஷ், பூனம் தில்லியான், ஸ்வப்னா, சரிதா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்ட நிலையில், அவர்களின் அன்பு தன்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் ராதா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். விடிய விடிய நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் 57 வயதான ராதா ஆடிய நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

57 வயதான ராதா
57 வயதான நிலையிலும் நடிகை ராதா தொடர்ந்து தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார். இவரது மகள்கள் சொந்த பிசினசை கவனித்துவரும் நிலையில், சினிமா, டிவி என தொடர்ந்து தன்னை பிசியாக்கிக் கொண்டுள்ள ராதா, தான் முன்னணி நடிகையாக இருந்தபோது மட்டுமில்லாமல் தற்போது அனைவரையும் கவர்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











