பீல்ட் அவுட்டான பிறகு எதுக்கு இந்த போஸ்… கோ பட நடிகையை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
சென்னை: நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் பட வாய்ப்பு இல்லாமல் பீல்ட் அவுட்டாகிய போதும் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
80,90களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை ராதா, அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கமல், ரஜினி, விஜய்காந்த், சத்யராஜ் உட்பட பல பிரபலங்களுடன் நடித்தார்.
பத்து ஆண்டுகாலம் தமிழ்சினிமாவின் கனவு கன்னியாக இருந்த நடிகை ராதா , ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகா நாயர், துளசி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

நடிகை கார்த்திகா நாயர்: நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயர், மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அதிகளவிலான ரசிகர்களை பெற்றவர் என்று கார்த்திகாவைச் சொல்லலாம். ஆனால் முதல் படத்தைத் தொடர்ந்து குறிப்பிட்டு சொல்லும் வகையிலான எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.
நோ யூஸ்: தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் மகரம்ஞ்சு, தெலுங்கில் ஜோஷ், கன்னடத்தில் பிரிந்தாவனா, ஆகியப் படங்களில் நடித்த கார்த்திகாவிற்கு சொல்லிக் கொள்ளும் வகையிலான எந்த படமும் வெற்றிப்படங்களாக அமையவில்லை. எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தின் குயிலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பின் அருண் விஜய்க்கு ஜோடியாக, வா டீல் என்ற படம் சில பிரச்சனையால் வெளியாகவில்லை.
பீல்ட் அவுட்: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த நடிகையின் மகளாக இருந்த போதும் எந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராததால், நடிகை கார்த்திகா நாயர் தனது அப்பாவின் ஓட்டல் தொழிலை கவனித்து வந்தார். இருந்த போதும், பழைய நினைப்புடா பேராண்டி என்பது போல அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ஒருசில பேன்ஸ், பீல்ட் அவுட்டான பிறகு எதுக்கு இந்த போஸ் என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











