ஐந்து பேரைத் திருமணம் செய்தேனா... நான் ஒன்றும் விபச்சாரி அல்ல! - நடிகை ராதா

By Shankar

சென்னை: நான் ஐந்து பேரைத் திருமணம் செய்ததாக பைசூல் கூறியிருப்பது பொய். நான் ஒன்றும் விபச்சாரி அல்ல.. பைசூல்தான் பல நடிகைகளுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார், என்று நடிகை ராதா குற்றம்சாட்டியுள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, 6 ஆண்டுகளாக குடித்தனம் நடத்தி 50 லட்சம் பணத்தையும் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று வைர வியாபாரி பைசூல் மீது நேற்று சென்னை கமிஷனரிடம் புகார் அளித்தார் நடிகை எஸ்.ராதா.

பைசூல் மறுப்பு

பைசூல் மறுப்பு

இவரின் குற்றச்சாட்டுகளை தொழில் அதிபர் பைசூல் மறுத்தார். அவர், ராதா பலரை திருமணம் செய்தவர் என்றும், அவருக்கு 5 முறை திருமணமாகியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

காத்தவராயனில் நடித்த போது...

காத்தவராயனில் நடித்த போது...

இதற்கு பதிலளித்துள்ள ராதா, "6 வருடத்துக்கு முன் காத்தவராயன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது சவுந்தரபாண்டி என்பவர் பைசூலை எனக்கு அறிமுகப்படுத்தினார். சிங்கப்பூரில் பெரிய வைர வியாபாரி, பைனான்சியர் என்று சொன்னார். எனது தீவிர ரசிகர் என்றும் கூறினார்.

பணக் கஷ்டம்

பணக் கஷ்டம்

அப்போது எனக்கு பண கஷ்டம் இருந்தது. ரூ.2 லட்சம் கடன் கொடுத்தார். இதனால் பைசூல் மேல் மரியாதை ஏற்பட்டது. அதன்பிறகு அடிக்கடி சந்திதார். ஒருநாள் என் கையை பிடித்து காதலிப்பதாக சொன்னார். காரில் என் வீட்டு முன்னால் அடிக்கடி வந்து நின்றார். பெரிய பணக்காரன் என்று நினைத்தேன். என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசை காட்டினார். நானும் நம்பினேன்.

தாலிகட்டாத மனைவியாக

தாலிகட்டாத மனைவியாக

வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி என்னோடு வாழத் தொடங்கினார். ஒரே வீட்டில் கணவன், மனைவியாக குடும்பம் நடத்தினோம். என்னை மணந்து கொள்வார் என்று முழுமையாக நம்பினேன். வைர வியாபாரத்துக்கு தேவைப்படுவதாக ரொக்கம், நகை என்று ரூ.50 லட்சத்துக்கு மேல் என்னிடம் வாங்கினார்.

பல நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு

பல நடிகைகளுடன் செக்ஸ் தொடர்பு

அதன்பிறகு வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டார். விசாரித்தபோது நிறைய நடிகைகள் மற்றும் பெண்களுடன் அவருக்கு செக்ஸ் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

எல்லாமே பொய்

எல்லாமே பொய்

இதனால் அதிர்ச்சியானேன். பைசூலுக்கு 42 வயது ஆகிறது. அவர் சிங்கப்பூர் வைர வியாபாரி என்றது பொய். ஏற்கனவே திருமணமாகி மனைவி ஓடிவிட்டாள். மதம், தொழில், ஊர் பெயர் எல்லாம் ஆரம்பத்தில் அவர் சொன்னது பொய். என்னுடன் தாலி கட்டாமல் ரகசிய குடித்தனம் நடத்தவே அவர் விரும்பி இருக்கிறார்.

நடிகையை திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது என்று இப்போது சொல்கிறார். அப்படியென்றால் 6 வருடங்கள் என்னொடு குடித்தனம் நடத்தியது எதற்காக? என் கையால் சமைத்து சாப்பிட்டது எதற்காக? வீட்டிலேயே கதியாக கிடந்தது எதற்காக? நம்பிய என்னை மோசம் செய்து விட்டார்.

சட்ட விரோத காரியங்கள்

சட்ட விரோத காரியங்கள்

பைசூல் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்ட தகவல்களும் எனக்கு தெரிய வந்தது. இவரது கூட்டாளி ஒருவன் மலேசியாவில் கைதாகி இருக்கிறான். நன்றாக குடும்பம் நடத்தியபோது ‘சைக்கோ' போல் அடிப்பார். காமக் கொடூரனாக நடந்து கொள்வார். செக்ஸ் வைத்துக் கொண்டதையெல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அவரது மொபைலில் நிறைய பெண்கள் ‘செக்ஸ்' மெசேஜ் அனுப்புவார்கள். உடம்பாலும் மனதாலும் நிறைய புண்பட்டு விட்டேன்.

நான் விபச்சாரி அல்ல

நான் விபச்சாரி அல்ல

பைசூலால் சினிமாவை விட்டேன். பணத்தையும் இழந்தேன். எனக்கு ஐந்து திருமணங்கள் நடந்துள்ளதாக பைசூல் அபாண்டமாக பழி போடுகிறார். அப்படி திருமணம் நடந்து இருந்தால் அதற்கான படங்களை காட்டட்டும். யாருடனும் எனக்கு திருமணம் நடக்க வில்லை. நான் ஒன்றும் விபசாரி அல்ல. பைசூல் வேண்டும் என்றுதான் வாழ்ந்தேன்.

பணத்தை திருப்பிக் கொடுத்தால் போதும்...

பணத்தை திருப்பிக் கொடுத்தால் போதும்...

என்னிடம் வாங்கிய பணத்தை அவர் திருப்பி தந்தால் போதும். எனக்கு சொந்த வீடு இருக்கிறது. அதுதவிர வேறு வருமானம் இல்லை. பைசூல் ஏமாற்றி வாங்கிய பணத்தை போலீசார் மீட்டு தருவார்கள் என்று நம்புகிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X