திருமணத்திற்குப்பின் குட்நியூஸ் சொன்ன ராதாவின் மகள்.. கார்த்திகா நாயருக்கு குவியும் வாழ்த்தும்!
சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா. இவருடைய மூத்த மகளான கார்த்திகா நாயர், கடந்த 2009-ஆம் ஆண்டு தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஜோஷ் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன்பின்னர், தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான 'கோ' மூலம் தமிழ் நெஞ்சங்களில் கால் பதித்தார். பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் கார்த்திகா நடித்த இந்த படம் இவருக்குப் மிகப்பெரிய அடையாளத்தைத் தந்தது.
ராதிகாவின் மகள்: தமிழில் 'கோ' படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் தம்மு, மலையாளத்தில் மெகாஸ்டார் மம்மூட்டியுடன் கம்மத் & கம்மத், கன்னடத்தில் தர்ஷனுடன் பிருந்தாவனம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் கார்த்திகா நடித்தார். தமிழில் கடைசியாக கடந்த 2015-ஆம் ஆண்டு எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான புறம்போக்கு என்கிற பொதுவுடமை படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர், தமிழ் சினிமாவில் சரியான படவாய்ப்புகள் அமையாததால் திரையுலகில் இருந்து சற்று விலகியிருந்த கார்த்திகா நாயர், கடந்த 2023-ஆம் ஆண்டு ரோஹித் மேனன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அழகான கடற்கரை ரிசார்ட்டில், இருவீட்டாரின் சம்மதத்துடன் மலையாள பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

புதுவீடு புகுந்த கார்த்திகா: திருமணத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வரும் கார்த்திகா நாயர், தற்போது தன் கணவருடன் சேர்ந்து ஒரு பிரம்மாண்டமான புதுவீடு கட்டி அதன் கிரகப்பிரவேசத்தை நடத்தியுள்ளார். அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் சென்னையில் புதுவீடு கட்டி குடியேறிய செய்தி வைரலான நிலையில், தற்போது நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் தனது புதிய இல்லத்தில் குடியேறியுள்ளார். புதுவீட்டின் பூஜை அறையில் தன் கணவருடன் பாரம்பரிய உடையில் கார்த்திகா எடுத்துக்கொண்ட கிரகப்பிரவேசப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம்ம ட்ரெண்டாகி வருகின்றன. இதைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் கார்த்திகா நாயருக்குத் தங்களது வாழ்த்துகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications