கல்யாணமாகி 12 ஆண்டுகள்.. திடீரென கர்ப்பமான கபாலி பட நடிகை.. ராதிகா ஆப்தேவை வாழ்த்தும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தவர். ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் கடந்த 2012ம் ஆண்டில் தோனி என்ற படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து ரஜினியுடன் கபாலி படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
ரஜினியின் மனைவியாக கபாலி படத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இந்தப் படத்தின் கதைக்களம் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளை சிறப்பாக்கியிருந்தது. அதை சிறப்பாகவே பயன்படுத்தியிருந்தார் ராதிகா ஆப்தே. தொடர்ந்து படங்களில் மட்டுமில்லாமல் வெப் தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார்.

நடிகை ராதிகா ஆப்தே: நடிகை ராதிகா ஆப்தே மருத்துவராக இருந்தபோதிலும் சினிமாவின் மீது இருந்த விருப்பத்தின் காரணமாக கடந்த 2005ம் ஆண்டில் இந்தியில் பாலிவுட் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து அறிமுகமானார். தொடர்ந்து குறும்படங்கள், வெப் தொடர்கள் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் தனக்கு நடிக்க கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்தினார் ராதிகா ஆப்தே. இதனிடையே கடந்த 2012ம் ஆண்டில் இவருக்கு தமிழில் தோனி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவருக்கு ரஜினிகாந்திற்கு ஜோடியாகும் வாய்ப்பும் கிடைத்தது.
கபாலி படம்: பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே. இந்தப் படத்தில் ரஜினி மற்றும் ராதிகா ஆப்தேவின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருந்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருந்தார் ராதிகா ஆப்தே. தொடர்ந்து இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லருக்கும் ராதிகா ஆப்தேவிற்கும் இடையில் காதல் ஏற்பட்டு 2012ம் ஆண்டிலேயே இவர்கள் திருமணம் நடந்தது. இதையடுத்து பெனடிக்ட் இங்கிலாந்திலும் ராதிகா மும்பையிலும் வசித்து வந்தனர்.

ராதிகா ஆப்தே திருமணம்: அவ்வப்போது தன்னுடைய காதல் கணவரை பார்க்க ராதிகா ஆப்தே லண்டன் சென்று வந்தார். இதனால் இவர்களுக்குள் திருமணமே நடக்கவில்லை என்றும் கூட பேசப்பட்டது. இதற்கெல்லாம் தன்னுடைய மௌனத்தையே பதிலாக கொடுத்தார் ராதிகா ஆப்தே. இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற பிஎஃப்ஐ பிலிம் பெஸ்டிவலில் பங்கேற்ற ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருந்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தற்போது ராதிகா ஆப்தே கர்ப்பமாகியுள்ளார். தன்னுடைய சொந்த வாழ்க்கையை பொதுவெளியில் அதிகமாக வெளிப்படுத்தாதவர் ராதிகா ஆப்தே.
ராதிகா ஆப்தே கர்ப்பம்: இதனால் இவருக்கு திருமணமானதே அதிகமான ரசிகர்களுக்கு தெரியாத நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். சிஸ்டர் மிட்நைட் என்ற ஆங்கில படத்தில் ராதிகா ஆப்தே நடித்துள்ள நிலையில், அந்தப் படத்தின் லண்டன் பிரீமியரில் எடுக்கப்பட்ட போட்டோசை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் இது எத்தனையாவது மாதம் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











