'அந்த மாதிரி' நடிச்சது தப்பாப்போச்சு.. அதே மாதிரி வாய்ப்புகளே வருகின்றன.. பிரபல நடிகை வேதனை!

மும்பை: ஆபாச படங்களில் நடிக்கவே அதிக வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட் நடிகையான இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானார்.

தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கவர்ச்சி ரோல்களை தட்டாமல் மிகத் துணிச்சலாக எதிர்கொள்வார் ராதிகா ஆப்தே.

படுக்கையறை காட்சிகள்

படுக்கையறை காட்சிகள்

அவ்வப்போது இவரின் நிர்வாண போட்டோக்கள், படுக்கையறை காட்சிகள் என வெளியாகி பரபரப்பை கிளப்பி வரும். ராதிகா ஆப்தே அணியும் உடைகளும் சூட்டை கிளப்பும்.

மனம் திறந்த நடிகை

மனம் திறந்த நடிகை

இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்த ராதிகா ஆப்தே திரைத்துறையில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பட்லாபூர் படம்

பட்லாபூர் படம்

அவர் பேசியதாவது, கதைக்கு தேவை என்பதால் அரைகுறை ஆடையில் நடித்தேன். பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து இருந்தேன். ஆபத்தில் சிக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது.

ஆபாச வாய்ப்புகள்

ஆபாச வாய்ப்புகள்

அந்த கேரக்டர் மற்றும் அந்தக் காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதுபோன்று நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த வேடத்தில் துணிச்சலாக நடித்ததால் அதுபோன்ற ஆபாசம் நிறைந்த வாய்ப்புகளே வருகின்றன.

எனக்கு விருப்பமில்லை

எனக்கு விருப்பமில்லை

அந்த கதைகளுக்கு அந்த அளவுக்கு கவர்ச்சியும் தேவையில்லை. கவர்ச்சியை காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே கதை சொல்கிறார்கள். அதுபோன்ற கதைகளில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.

தவிர்க்க வேண்டும்

தவிர்க்க வேண்டும்

ஆகையால் அந்த மாதிரி வாய்ப்புகளை மறுத்து விடுகிறேன். முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லை மீறி மோசமான ஆபாச படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகை ராதிகா ஆப்தே வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X