எப்ப விழுந்தாலும் உடனே எழுந்து நிற்பேன்.. இதுதான் நான்.. ராதிகா சொன்ன அட்வைஸ்.. யாருக்கு தெரியுமா?

சென்னை : நடிகை மீனா தனது 46வது பிறந்தநாளை இரு தினங்களுக்கு முன்பு கொண்டாடினார்.

இந்தப் பிறந்தநாளில் அவர் தனது தோழிகளுடன் இணைந்து பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடினார்.

அன்றைய தினம் நடிகை ராதிகாவும் மீனாவை ஒரு ரெஸ்டாரெண்டிற்கு அழைத்து சென்று ட்ரீட் கொடுத்துள்ளார்.

நடிகை மீனா

நடிகை மீனா

நடிகை மீனா சிறு வயதிலிருந்து படங்களில் நடித்து வருகிறார். சிறுமியாக தொடங்கிய இவரது பயணம் நாயகியாக பெரிய எல்லைகளை தொட்டது. ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் தமிழில் இவர் நடித்துள்ளார். தென்னிந்திய அளவிலும் பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார்.

மீனா சொந்த வாழ்க்கை

மீனா சொந்த வாழ்க்கை

இதையடுத்து வித்யாசாகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினீயரை திருமணம் செய்துக் கொண்டார் மீனா. சினிமாவில் பெஸ்ட்டாக உள்ள மீனாவின் சொந்த வாழ்க்கையில் வசந்தம் வீசவில்லை. சமீபத்தில் இவரது கணவர், மல்டி ஆர்கன் செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். திரையுலகமே இவரது சோகத்தில் பங்கேற்றது.

 முடங்கிய மீனா

முடங்கிய மீனா

இதையடுத்து வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த மீனா, தற்போது சிறிது சிறிதாக தன்னுடைய சோகத்தில் இருந்து மீண்டு வருகிறார்.இதற்கு பெரும் துணையாக இவரது சினிமா தோழிகள் உள்ளனர். சங்கவி, சங்கீதா, ரம்பா உள்ளிட்ட நடிகைகள் சமீபத்தில் மீனாவின் வீட்டிற்கு சென்று அவருடன் உற்சாகமான நேரத்தை செலவழித்தனர்.

மீனா பிறந்தநாள்

மீனா பிறந்தநாள்

இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகை மீனா தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். ஸ்ரீதேவி, கலா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் இவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடினர். இந்த வீடியோவை மீனாவே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

மீனாவிற்கு ட்ரீட்

மீனாவிற்கு ட்ரீட்

இதுமட்டுமில்லாமல் நடிகை ராதிகாவும் தனியாக மீனாவிற்கு ரெஸ்டாரெண்டில் ட்ரீட் கொடுத்துள்ளார். இந்த ட்ரீட்டுக்கு நடிகை மீனா தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்து பதிவிட்டிருந்தார். சமீபத்தில் ராதிகாவின் பிறந்தநாளையொட்டி மீனா, வீடியோவுடன் வாழ்த்துக்களை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ராதிகா அட்வைஸ்

ராதிகா அட்வைஸ்

இந்நிலையில் ராதிகாவின் நன்றி குறித்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ராதிகா, தான் வாழ்க்கையில் எப்போது வீழ்ந்தாலும் உடனடியாக எழுந்து விடுவேன் என்றும் அது மட்டுமில்லாமல் உடனே ஓடவும் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வாழ்க்கையில் இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிய பயணத்தை துவக்குமாறும் மீனாவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேவையான அட்வைஸ்

தேவையான அட்வைஸ்

தன்னுடைய கணவரின் மறைவிற்கு பிறகு தன்னுடைய இயல்பு வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியுள்ளார் மீனா. சூட்டிங்கிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ராதிகா கொடுத்துள்ள இந்த அட்வைஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X