நீயா நடிக்கப் போறன்னு அப்பா கேட்டாரு.. ஆனாலும் அவர் செஞ்ச விஷயம்.. எம்ஆர் ராதா குறித்து ராதிகா!

சென்னை: நடிகை ராதிகா பல ஆண்டுகளாக தென்னிந்திய மொழிப்படங்களில் மிகச்சிறப்பாக நடித்து வருகிறார். தன்னுடைய கேரியரில் சிறிதும் இடைவெளி இல்லாமல் நாயகியாகவும் கேரக்டர் ரோல்களிலும் தற்போது பிரபல ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார் ராதிகா.

நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்ட ராதிகாவிற்கு ராகுல் என்ற மகன் உள்ளார். முன்னதாக தனக்கு பிறந்த ரேயானிடம் மட்டுமில்லாமல் சரத்குமாரின் மகளான வரலட்சுமியிடலும் மிகவும் நெருக்கமாக பழகிவருகிறார் ராதிகா. சமீபத்தில் நடந்த வரலட்சுமி திருமணத்தில் முன்னாள் இருந்து அனைத்து வேலைகளையும் செய்திருந்தார்.

radhika mr radha tamil cinema

நடிகை ராதிகா: நடிகை ராதிகா தென்னிந்திய அளவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கிழக்கே போகும் ரயில் படம் மூலம் பாரதிராஜா இயக்கத்தில் தமிழில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்த ராதிகாவிற்கு முதலில் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கிடைத்த நிலையில், அவற்றையெல்லாம் சிட்டிவ்வாக மாற்றிக் காட்டினார். தொடர்ந்து கிராமத்து கேரக்டர்களில் மட்டுமில்லாமல் மாடர்ன் பெண்ணாகவும் அதிரடி கேரக்டர்களிலும் நடித்திருந்தார் ராதிகா. தற்போதும் தொடர்ந்து நடித்துவரும் ராதிகா பிரபல ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

சரத்குமாருடன் திருமணம்: நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்ட ராதிகாவிற்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இருந்தாலும் தன்னுடைய முந்தைய திருமண வாழ்க்கையில் பிறந்த ரேயான் மற்றும் சரத்குமாரின் மகள்கள் என அனைவரிடமும் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் நடந்த நிலையில் அந்த திருமணத்தில் முதன்மையாக பல வேலைகளை செய்திருந்தார். சரத்குமாருடன் இணைந்தும் தனியாகவும் ஆட்டம் போட்ட வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தன. இந்த வீடியோக்களை மற்றும் திருமண நிகழ்வுகளை அடுத்தடுத்து வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டு வருகிறார்.

ராதிகா எமோஷனல்: மூத்த நடிகரான மறைந்த எம்ஆர் ராதாவின் மகளான ராதிகா, அந்த அடையாளத்துடன்தான் சினிமாவில் நடிக்கத்துவங்கனிர். ஆனாலும் அந்த அடையாளத்துடன நிறுத்திக் கொள்ளாமல் தனக்கென தனியொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். நடிகையாக மட்டுமில்லாமல், தயாரிப்பாளர், சீரியல் தயாரிப்பாளர், சீரியல் இயக்குநர் என பல்வேறு தளங்களில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய அப்பா குறித்து நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய எமோஷனலை பகிர்ந்துக் கொண்டார். அப்பா எம்ஆர் ராதா குறித்து பேசியபோது அவர் கண்கலங்கியதை பார்க்க முடிந்தது.

நீயா நடிக்கப் போறேன்னு கேட்டாரு: எம்ஆர் ராதா நடிப்பில் லட்சுமிகாந்தன் என்ற நாடகம் தன்னுடைய ஃபேவரிட் என்று கூறியுள்ள ராதிகா, தன்னுடைய அப்பாவிற்கு எழுத படிக்கத் தெரியாத நிலையில், அவரிடம் டயலாக்கை சொல்வார்கள் என்றும் உள்வாங்கிக் கொண்டு அவர் நடிப்பார் என்றும் கூறியுள்ளார். அதில் பெண் வேடம் போட்டு நடித்ததையும் நினைவு கூர்ந்தார். தொடர்து தூக்குமேடை நாடகத்திலும் அவர் சிறப்பாக நடித்ததை குறிப்பிட்டார். தான் நடிக்க வந்தபோது நீயா நடிக்க போறே என்று தன்னைப் பார்த்து கேட்டதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார். ஏனென்றால் தான் எப்போதும் ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன் என்றும் ராதிகா கூறியுள்ளார்.

ராதிகா கண்ணீர்: தனக்கும் சினிமாவிற்கும் அந்த நேரத்தில் சம்பந்தமே இருக்காது எனறும் கூறியுள்ளார் ராதிகா. ஆனால் தான் முதல் முறையாக மேக்கப் போட அமர்ந்தபோது தனக்கு பொட்டு வைத்து, என் தொழில் உனக்கு துணையாக இருக்கட்டும் என்று எம்ஆர் ராதா வாழ்த்தியதாகவும் அவர் முன்னதாக இதுபோன்று நடந்துக் கொண்டதில்லை என்பதையும் ராதிகா சுட்டிக் காட்டியுள்ளார். தான் தற்போது நடிகையாக பெயர் வாங்கியுள்ளதற்கு அவரது வாழ்த்துதான் காரணம் என்றும் ராதிகா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதை கேட்டு பார்வையாளராக நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த சரத்குமாரும் கண்கலங்கியதை பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X