Varalaxmi -Nicholai marriage:வரலட்சுமி -நிக்கோலய் திருமணத்தில் ராதிகா போட்ட ஆட்டம்.. என்னா எனர்ஜி!

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் போடா போடி படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்து குறுகிய காலத்திலேயே ஏராளமான தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து முடித்துள்ளார். அவர் தனது நீண்ட கால நண்பரான நிக்கோலயை இன்றைய தினம் திருமணம் செய்துள்ளார்.

மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இந்நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் சேர்ந்தும் தனித்தனியாகவும் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடியதை பார்க்க முடிந்தது. இந்த வயதிலும் இவ்வளவு எனர்ஜியா என அனைவரும் வியக்கும்வகையில் இவர்களது நடனம் அமைந்திருந்தது.

Varalaxmi sarathkumar Nicholai sachdev Radhika sarathkumar

வரலட்சுமி -நிக்கோலய் திருமணம்: நடிகை வரலட்சுமி சரத்குமார் -நிக்கோலய் சச்தேவ் இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரின் திருமணம் இன்றைய தினம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது ரிசப்ஷன் நாளைய தினம் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சரத்குமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் தெரிவித்துள்ளனர். திருமண கொண்டாட்டங்களில் சரத்குமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பாக பங்கேற்றத்தை காண முடிந்தது. ஹால்டி, மெஹந்தி என அடுத்தடுத்த நிகழ்வுகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.

சரத்குமார் -ராதிகா நடனம்: இந்நிலையில் நடிகர் சரத்குமாரும் ராதிகாவும் இந்த திருமண கொண்டாட்டத்தில் அடுத்தடுத்து ஸ்டேஜில் அனைவரையும் கவரும் வகையில் நடனமாடியதையும் பார்க்க முடிந்தது. அழகான பெண்களுடன் சரத்குமார் ஆட்டம் போட்ட நிலையில் நடிகை ராதிகா சோலோவாக பொன்மகள் வந்தாள் என்ற பாடலுக்கு ஆடிய நடனம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு ஸ்டெப்பையும் மிகவும் அழகாகவும் அனைவரையும் கவரும் வகையிலும் ராதிகா போட்டுள்ளார்.

நாளை திருமண வரவேற்பு: ராதிகா 90களில் மாடர்ன் பெண்ணாக நடித்து பல பாடல்களை சிறப்பாக்கி உள்ள நிலையில் அவற்றை நினைவுபடுத்தும் வகையில் அவரது தற்போதைய நடனம் காணப்பட்டது, அவரது நடனத்தை பார்த்து பலரும் விசில் அடித்து கொண்டாடியதையும் பார்க்க முடிந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நாளைய தினம் வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலய் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் திருமணம் மற்றும் மற்ற நிகழ்வுகளின் கொண்டாட்ட தருணங்களின் புகைப்படங்களை வெளியிட உள்ளதாக வரலட்சுமி சரத்குமார் அறிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்: இதனிடையே இந்த புகைப்படங்களுக்கு முன்னதாகவே சமூக வலைதளங்களில் கடந்த இரு தினங்களாக இந்த கொண்டாட்ட தருணங்களின் புகைப்படங்கள் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு சென்றவர்கள் பலரும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் மாறி மாறி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X