யானை படத்தின் டப்பிங் ... ஜம்முன்னு உட்கார்ந்து ராதிகா சொன்னத கேளுங்க!

சென்னை : இயக்குனர் ஹரியின் அடுத்த படம் யானை. இந்த படத்தில் அவரது மச்சான், அருண் விஜய் நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததை அடுத்து அருண்விஜய் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

தற்போது படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து ராதிகா அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அருண்விஜய்

நடிகர் அருண்விஜய்

நடிகர் அருண்விஜய் தொடர்ந்து சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அவரது நடிப்பில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. குற்றம் 23, தடையறத்தாக்க உள்ளிட்ட சிறப்பான படங்களை அவர் ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார்.

யானை படம்

யானை படம்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் அருண் விஜய் தற்போது தன்னுடைய தங்கை கணவர் ஹரியுடன் இணைந்து யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் சிங்கம் படத்தை எடுத்து இருந்த ஹரி தற்போது யானை என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார்.

ஷூட்டிங் நிறைவு

ஷூட்டிங் நிறைவு

கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையொட்டி படக்குழுவினருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரிப்பு

டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரிப்பு

டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின.

அருண் விஜய்யின் 33வது படம்

அருண் விஜய்யின் 33வது படம்

அருண் விஜய்யின் 33வது படம் இது என்பதால் முப்பத்தி மூன்று பிரபலங்கள் இந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட்டனர்.

பிரியா பவானி சங்கர் நாயகி

பிரியா பவானி சங்கர் நாயகி

படத்தில் அருண் விஜய்க்கு ஜோடி ஆகியுள்ளார் பிரியா பவானி சங்கர். மேலும் படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார் அம்மு அபிராமி, தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, குக்கு வித் கோமாளி புகழ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

டப்பிங் பணிகள்

டப்பிங் பணிகள்

படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி படத்தின் டப்பிங் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் டப்பிங் பணியில் தற்போது ராதிகா சரத்குமார் ஈடுபட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

ராதிகா அப்டேட்

ராதிகா அப்டேட்

டப்பிங் ஸ்டூடியோவில் தான் இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ள ராதிகா சரத்குமார் படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். படத்திற்கு ஜி வி குமார் இசை அமைத்துள்ள நிலையில் விரைவில் டீஸர் ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X