தேங்க்ஸ் சொன்ன ராதிகா சரத்குமார்.. விராட் கோலியுடன் க்யூட் செல்ஃபி.. அழகு அள்ளுதே!
சென்னை: நடிகை ராதிகா சரத்குமார் பல ஆண்டுகளை கடந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். வெள்ளந்தியான கிராமத்து கேரகர்களில் நடிக்க துவங்கிய இவரது பயணம் அப்படியே மாடர்ன் கெட்டப்பிற்கு மாறியது. ஒரு கட்டத்தில் அதிரடியான படங்களிலும் நடித்து மாஸ் காட்டியுள்ளார்.
இந்நிலையில் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் ராதிகா சரத்குமார். நடிகை, சீரியல் நடிகை, சீரியல் தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வரும் ராதிகா, முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அம்மா கேரக்டராக இருந்தாலும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும்படியாக பார்த்து வருகிறார்.

நடிகை ராதிகா சரத்குமார்: நடிகை ராதிகா பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில்தான் முதல்முறையாக என்ட்ரி கொடுத்திருந்தார். வெள்ளந்தியான அந்த கேரக்டருக்கு மிகப்பெரிய அளவில் பொருந்தினார் ராதிகா. இந்தப் படத்தின் வெற்றி, இவரை தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக்கியது. தொடர்ந்து அடுத்தடுதத படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து மாஸ் காட்டிய ராதிகா, போல்டான மற்றும் ஸ்டைலிஷ்ஷான கேரக்டர்களிலும் மிகச்சிறப்பாக தன்னால் பொருந்த முடியும் என்பதை வெளிப்படுததினார். ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
சரத்குமாருடன் திருமணம்: ஒரு கட்டத்தில் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ராதிகாவிற்கு முன்னதாக நடந்த திருமணத்தில் ரேயான் என்ற பெண் உள்ளார். ராதிகா தற்போது நடிகை, சின்னத்திரை நடிகை, சீரியல் தயாரிப்பாளர் என பன்முகம் காட்டிவருகிறார். இவரது சித்தி உள்ளிட்ட சீரியல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தவை. தொடர்ந்து ஒரு கட்டத்தில் சீரியலகளில் மிகப்பெரிய கவனம் செலுத்தி தானே லீட் கேரக்டர்களில் நடித்தார் ராதிகா. தற்போது விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.
விராட் கோலியுடன் செல்ஃபி: சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ராதிகா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு தனியாகவோ தன்னுடைய குடும்பத்தினருடனோ பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது லண்டனில் ட்ரிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் இடையில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை சந்தித்துள்ளார். அவருடன் இணைந்து செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்துள்ளார். அழகான கிராப் தலையுடன் இந்த புகைப்படத்தில் ராதிகா க்யூட்டாக காணப்படுகிறார். விராட் கோலியும் அழகில் அசத்துகிறார். இந்த புகைப்படததை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ராதிகா சரத்குமார் பகிர்ந்துள்ளார்.
ராதிகா உற்சாகம்: மேலும் மில்லியன் கணக்கான ரசிகர்களால் விரும்பப்படும் விராட் கோலியை சந்தித்தது குறித்தும் உற்சாகம் தெரிவித்துள்ளார். லண்டன் -சென்னை பயணத்தின்போது இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அவர் இங்கு விளையாட உள்ளதையும் ராதிகா குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை லைக் செய்துவரும் ரசிகர்கள், பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சந்தோஷத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











