நடிகை ராதிகாவின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. மகள் கோரிக்கை!
சென்னை: நடிகை ராதிகாவின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் ரேயான் தெரிவித்துள்ளார்.
1978ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா. ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போதும் படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் ராதிகா.

ராதிகாவின் டிவிட்டர் கணக்கு ஹேக்டு
திரைப்படங்கள் மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்து வருகிறார் ராதிகா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ராதிகா, அவ்வப்போது தனது போட்டோக்கள், தனது பேரனுடன் இருக்கும் போட்டோக்கள் என பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராதிகாவின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

சரி செய்ய முயற்சி செய்கிறேன்
தனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை நடிகை ராதிகாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார். அதாவது "ஹாய் எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது, கன்டென்ட் மற்றும் மெஸேஜ்களில் ஜாக்கிரதையாக இருங்கள். நன்றி.. சரி செய்ய முயற்சி செய்கிறேன்" என்று பகிர்ந்துள்ளார்.

நடிகை குஷ்பு தகவல்
நடிகை ராதிகாவின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அவரது மகளான ரேயான் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் அந்த பக்கத்தில் இருந்து அனுப்பப்படும் மெஸேஜ்களை திறக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல் நடிகை குஷ்புவும் தனது டிவிட்டர் பக்கத்தில் ராதிகாவின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அறிவித்துள்ளார்.

விரைவில் திரும்பி வருவேன்
மேலும் ராதிகா இந்த பிரச்சினை தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும், அதை சரிசெய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, "வணக்கம் நண்பர்களே, எனது நல்ல நண்பர் மற்றும் திறமையான realradikaa கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் சிக்கலை தீர்க்க முயற்சி நடைபெறுகிறது. தற்போது இணைய முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறார், ஆனால் விரைவில் திரும்பி வருவேன் என்று உறுதியளித்துள்ளார். உங்கள் ஆதரவுக்கு நன்றி," என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications