Vijayakanth - You Have Done Your Best Viji.. விஜயகாந்த்தை நினைத்து ராதிகா உருக்கம்

சென்னை: நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சூழலில் அவரது உடல் இன்று மாலை தேமுதிக அலுவலகத்தின் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நடிகை ராதிகா உருக்கமாக விஜயகாந்த்துக்கு இரங்கல் குறிப்பு வெளியிட்டிருக்கிறார்.

நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் இப்போது தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.45 மணிக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது. முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தின் வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Actress Radhikaa expressed her heartfelt condolences to Vijayakanth

நேரில் அஞ்சலி: இதற்கிடையே அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. அங்கு கவுண்டமணி,விஜய், எம்.எஸ்.பாஸ்கர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று விஜயகாந்த்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகை ராதிகா தனது முகநூல் பக்கத்தில் விஜயகாந்த்துக்கு உருக்கமாக இரங்கல் குறிப்பு தெரிவித்திருக்கிறார்.

ராதிகாவின் இரங்கல் குறிப்பு: அவர் வெளியிட்டிருக்கும் குறிப்பில், "திரை உலகில் கடுமையான உழைப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த்! அதேபோல் அரசியலிலும் ஈடுபட்டு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றவர்..!! விஜயகாந்த் வில்லனாக நடித்த காலத்திலிருந்தே நிறைய படங்களில் அவருடன் நான் நடித்திருக்கிறேன்..!! தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் அவர்.!!

மனங்களை கவர்ந்தவர்: சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அடித்தட்டு மக்களின் மனங்களை கவர்ந்தவர் ...!! அப்படிப்பட்ட விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது எல்லோருக்குமே அது வேதனையாக இருந்தது..!! அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் மிகவும் துடித்து போனார்கள்..!! விஜயகாந்த் இந்த உலகில் இனி இல்லை என்பதை யாருடைய மனமும் ஏற்றுக் கொள்ளாது...!!

உண்மையான் கௌரவம்: அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்..!! இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகளை நடத்த முன் வந்தது விஜயகாந்த் அவர்களுக்கு அளித்த உண்மையான கௌரவம் என்று நான் கருதுகிறேன்...!!

you have done your best Viji: ஏழை எளிய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...!! அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்...!!you have done your best Viji" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X