Rayan: 46 வருஷத்துக்கு முன்னாடி.. விமர்சனங்களை பொய்யாக்கிய ராதிகா.. ரேயான் நெகிழ்ச்சி!

சென்னை: நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். இந்த முதல் படத்தில் அப்பாவித்தனமான கேரக்டரை அவர் வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக் கொண்டார் ராதிகா.

கிராமத்து கேரக்டராக இருந்தாலும் சிட்டி கேர்ளாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் அந்த கேரக்டரை மிக சிறப்பாக்கி விடுவார் ராதிகா. தற்போதும் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக தொடர்ந்து நடித்து வரும் ராதிகா சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். இந்நிலையில் தன்னுடைய அம்மா ராதிகாவின் 46 ஆண்டு சினிமா பயணத்தை பாராட்டியுள்ளார் அவரது மகள் ரேயான்.

Radhika Rayan tamil cinema

நடிகை ராதிகா: நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் மூலம் கோலிவுட்டில் பயணமானவர். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ராதிகாவிற்கு அறிமுகத்தை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து பாரதிராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் தொடர்ந்து நடித்து பயணித்து மிகப் பெரிய அளவில் தன்னை நிரூபித்தார். முதல் படத்தில் இவரது நடிப்பை பார்த்து கேலி பேசியவர்களை ஓரங்கட்டி விட்டு இவர் மிகப் பெரிய அளவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். கிராமத்து பெண்ணாக பார்த்து வந்த ராதிகாவை ஒரு கட்டத்தில் சிட்டி கேர்ளாகவும் பார்த்த ரசிகர்கள் அதையும் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டனர்.

சிறப்பான கேரக்டர்கள்: எந்த ஒரு கேரக்டராக இருந்தாலும் தன்னுடைய பாடி லாங்குவேஜால் அந்த கேரக்டரை உயிர்ப்பித்து மிகச் சிறப்பான நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. ஒரு கட்டத்தில் திருமணம் ஆகி செட்டில் ஆன ராதிகா, அடுத்தடுத்து பிரிவுகளை தாண்டி சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகனும் உள்ள நிலையில் சமீபத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் திருமணத்திலும் தாயாகவே கலந்து கொண்டு சிறப்பு செய்தார் ராதிகா. தன்னுடைய கேரக்டர்களுக்கு மிகச் சிறப்பான பலத்தை கொடுத்து வரும் ராதிகா, நடிப்பில் சில கேரக்டர்களை நம்மால் எந்த காலத்தில் மறந்து விட முடியாது.

ஜீன்ஸ் படத்தில் ராதிகா: அந்த வகையில் ஜீன்ஸ் படத்தில் ராதிகா ஏற்று நடித்திருந்த கேரக்டரின் சிறப்பான வசனத்தை தற்போது அவரது மகள் ரேயான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த கேரக்டர் குறித்து ராதிகா செய்த ரீல்சை பதிவிட்டுள்ளார். உனக்கு கோழி வாங்கி வரத் தெரியாது, ஆடு வாங்கி வரத் தெரியாது, சோடா மட்டும் வாங்கி வர தெரியுமா என்ற இந்த டயலாக்கை ராதிகா பேசியுள்ளார். இதனிடையே கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்பு, சிறப்பான ஒரு நடிகையை இந்திய சினிமா அறிமுகம் செய்ததாகவும் கூச்ச சுபாவமுள்ள, அழகற்ற அந்த பெண், தற்போது மிகவும் தன்னம்பிக்கை உடைய பெண்மணியாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ராதிகா ஒரு விதிவிலக்கு: மற்றவர்கள் தன்மீது கொண்ட கருத்துக்கள் பொய்யானவை என்று தொடர்ந்து தன்னுடைய அம்மா ராதிகா நிரூபித்ததாகவும் விதிவிலக்கு என்பதற்கு தகுந்த பெண்ணாக அவர் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். ராதிகாவிற்கு திறமை இல்லை, குழந்தை பிறந்தால் சினிமாவை விட்டு சென்று விடுவார், வயதானால் ஃபீல்ட் அவுட் ஆகிவிடுவார் என அடுத்தடுத்து தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை தொடர்ந்து ராதிகா பொய்யாக்கி வருவதாகவும் ரேயான் பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய அம்மா குறித்து தான் மிகுந்த பெருமை கொள்வதாகவும் இன்னும் அடைய வேண்டிய சாதனைகள் அதிகமாக இருப்பதாகவும் ரேயான் தெரிவித்துள்ளார்.

ராதிகா பதில்: ரேயானின் இந்த பதிவிற்கு நடிகைகள் குஷ்பூ, திரிஷா உள்ளிட்டவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் ராதிகாவும் ரேயானின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ளார். பின்னோக்கி பார்ப்பதற்கு நேரம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதாகவும் ஆனால் ஆனால் நல்லவற்றையும் அன்பையும் பாராட்ட தவறுவதில்லை என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X