»   »  திரிஷா காதலில் சடுகுடு, ஸ்கர்ட் கழன்றது தெரியாமல் ஆடியது...எல்லாமே இந்த சாட்சாத் ராகினிதான்!

திரிஷா காதலில் சடுகுடு, ஸ்கர்ட் கழன்றது தெரியாமல் ஆடியது...எல்லாமே இந்த சாட்சாத் ராகினிதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி ஆறு எங்களுக்கே சொந்தம் என ஆவேசம் காட்டி வரும் நடிகை ராகினி திவேதிதான் தெலுங்கு நடிகர் ராணா- நடிகை திரிஷா காதலுக்கு வேட்டு வைத்தவர் என்ற சர்ச்சையில் சிக்கியவர்.

தமிழில் நிமிர்ந்து நில், அறியான் படங்களில் நடித்துப் பார்த்தார் ராகினி திவேதி. ஆனால் கோடம்பாக்கத்தில் குப்பை கொட்ட முடியாமல் கன்னட சினிமாவுக்கே பொட்டியை கட்டிக் கொண்டு போனார் ராகினி.

இந்த ராகினி திவேதிதான் கடந்த சில நாட்களாக காவிரி பிரச்சனையில் ஆக்ரோஷமாக பேசி வருகிறார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், காவிரி எங்களுடையது என மோகினியாட்டம் போட்டார்.

Actress Ragini Dwivedi and controversies

சுதீப் விவகாரம்

தமிழ் சினிமாவில் போனியாகாத ராகினி திவேதி தொடர்ந்து சர்ச்சைகளில் 'நாயகி'யாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் நிதர்சனம். கடந்த ஆண்டு நடிகர் சுதீப் விவகாரத்தில் அடிபட்டதும் இந்த ராகினிதான்.

சுதீப்புடன் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க அப்படியே அவருடன் நெருக்கமாக இருந்துவிட்டார் ராகினி... இதனால்தான் சுதீப், மனைவியை விவகாரத்து செய்தார் என ஊடகங்கள் கிசுகிசுத்தன... பின்னர் சுதீப் தம்முடைய விவாகரத்து குறித்து வெளிப்படையாக சில கருத்துகளை தெரிவித்து இந்த அக்கப்போருக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

திரிஷா காதல்...

இதற்கு பின்னர் தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கும் திரிஷாவுக்கும் இருந்ததாக சொல்லப்படும் காதலில் கபடி விளையாடினார் ராகினி. இதனால் ராணா- திரிஷா காதல் முறிந்து போனது. அப்போது பகிரங்கமாகவே இந்த பஞ்சாயத்து குறித்து கருத்துகளைத் தெரிவித்திருந்தார் ராகினி.

சைமாவில் ஆடை கழன்றது...

துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் படுகவர்ச்சியாக ஆட்டம் போட்டார் ராகினி... அப்போது அவரது ஸ்கர்ட் கீழே நழுவி உள்ளாடை தெரிந்தது... அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் கெட்ட ஆட்டம் போட்டு முடித்தவரும் இந்த ராகினிதான்.

தற்கொலைக்கு காரணம்

கன்னட திரைப்படம் ஒன்றில் நடித்த போது உதவி இயக்குநர் ஒருவர் தமக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக புகார் கிளப்பினார் ராகினி. இதில் அந்த உதவி இயக்குநர் தற்கொலையே செய்து கொண்டார்... அப்போதும் ஊடகங்களில் தலைப்பு செய்தியானார் ராகினி.

இப்படி ஏகப்பட்ட அக்கப்போர் பஞ்சாயத்துகளுடன் வலம் வரும் ராகினிதான் 'காவிரி நம்முடையது' என கங்கணம் கட்டிக் கொண்டு களமாடுகிறார்!

English summary
Actress Ragini Dwivedi has been linked to two actors and even rumoured to have been the cause of break-ups.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil