80 கிலோ வெயிட்.. ஜிம்மில் நடந்த விபரீதம்..படுத்தபடுக்கையான நடிகை.. கவலையில் ரசிகர்கள்!
சென்னை: பொதுவாக நடிகைகள் என்றாலே உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்க வேண்டும் என்பதற்கான டயட், ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.அப்படி ஜிம்மில் உடற்பயிற்சி செய்த நடிகை ஒருவர், அதிகமான வெயிட்டை தூக்கி இப்போது படுத்தப்படுக்கையாகி இருக்கிறார்.

தமிழ்,தெலுங்கு,இந்தி,கன்னட திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை தான் ரகுல் ப்ரீத் சிங். இவர், 2009ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி படத்தில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின் தமிழில் இவர், யுவன் படத்தில் நடித்தார். அதன் பிறகு தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்தடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதும், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்: இதையடுத்து, 2017ஆம் ஆண்டு மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஸ்பைடர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இவரது கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதை அடுத்து, தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் குழந்தை தனமான கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து தமிழில் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோருடன் ஜோடியாக சேர்ந்து நடித்தார். தமிழில் மட்டுமன்றி அவ்வப்போது பாலிவுட்டிலும் தலைக்காட்டி வந்த ரகுல் ப்ரீத் சிங், தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பகானை திருமணம் செய்து கொண்டார்.

படுத்த படுக்கையான நடிகை: எப்போதும், டயட், வொர்க் அவுட் என உடம்பை பிட்டாக வைத்து இருக்கும் இவர்,ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போத 80 கிலோ வெயிட்டை எந்த செப்டி பெல்டும் இல்லாமல் தூக்கி முதுகை பஞ்சராக்கி தற்போது படுத்த படுக்கையாக இருக்கிறார்.இதுகுறித்து, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், நான் முட்டாள் தனமான தவறு செய்துவிட்டேன்,உடற்பயிற்சியில் என்னை நானே இன்னும் முன்னேற்றிக்கொள்ள செய்த செயல் இன்று எனக்கு பயங்கரமான பின்விளைவை ஏற்படுத்திவிட்டது.

ரசிகர்கள் கவலை: கடந்த 6 நாட்களாக நான் படுத்தபடுக்கையாகவே இருக்கிறேன். முழுவதுமாக நான் குணமடைய ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் ஆகும், ஆனால் அதிவிரைவில் நான் குணமடைய வேண்டும் ஒரே இடத்தில் தன்னம்பிக்கை இழந்து ஓய்வெடுப்பது எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் இதன் மூலம் எனது வாழ்க்கையில் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











