டால்ஃபினுக்கு முத்தம் கொடுக்கும் ராய் லட்சுமி..பாக்கும் போதே பதறுதே..தெறிக்கவிடும் புகைப்படங்கள் !

சென்னை : டால்ஃபினுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி.

கற்க கசடற என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ராய்லட்சுமி. அதன் பிறகு குண்டக்கா மண்டக்கா, தர்மபுரி, தாம் தூம், காஞ்சனா, மங்காத்தா, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் தனது நடிப்புத் திறமையால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஸ்லிம்மான ராய் லட்சுமி

ஸ்லிம்மான ராய் லட்சுமி

முன்பைவிட ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி இருக்கும் ராய் லட்சுமிக்கு பல ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சில படங்களில் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். கொழுகொழுவென்று இருந்த இவர் சமீபகாலமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை கணிசமாக குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

எப்போதும் பிஸி

எப்போதும் பிஸி

எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி, தனது செக்ஸியான புகைப்படங்களையும், மாடலிங் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவது வழக்கம். அடிக்கடி தன் ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கும் இவர் பதில் அளித்து வருவார்.

உடற்பயிற்சி முக்கியம்

உடற்பயிற்சி முக்கியம்

சமீபகாலமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு தன் உடல் எடை குறைந்த ரகசியத்தை தன் ரசிகர்களுக்கு கூறிவந்தார் ராய்லட்சுமி. எப்பொழுதும் வித்தியாசமான புகைப்படங்களுடன், தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் இவர், சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

Recommended Video

Cinderella Dress என்ன ரொம்ப வெறுப்பேத்திடுச்சு | Raai Laxmi Speech | Filmibeat Tamil
டால்ஃபினுக்கு முத்தம்

டால்ஃபினுக்கு முத்தம்

துபாயில், டால்ஃபினுடன் விளையாடும் புகைப்படங்கள் தற்போது அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தாலும் பழகுவதில் குழந்தை போல் மனம் கொண்ட ஒரு உயிரினம் தான் டால்ஃபின். எப்பொழுதும் கொஞ்சி விளையாடும் குணம் கொண்ட டால்பினுடன் ராய் லட்சுமி கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் டால்ஃபினை பின்னால் கட்டி பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள், அதன் மேல் ஏறி படுத்துக் கொண்டு நீச்சலடிக்கும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. டால்ஃபின் லட்சுமிராய்க்கு முத்தம் கொடுக்கும் போட்டோஸ் ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்துள்ளது. இப்பொழுது நடிகை ராய் லட்சுமி கேங்க்ஸ்டர் 2, ஜான்சி ஐபிஎஸ், ஆனந்த பைரவி போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X