Raiza Wilson : அடிக்கிற வெயிலுக்கு ஏத்த டிரஸ் இதுதான்… ஆளை சாய்த்த ரைசா வில்சன்!
நடிகை ரைசா வில்சன் அடிக்கிற வெயிலுக்கு ஏற்றபடி பட்டும் படாமல் டிரஸ் போட்டு போட்டோஷூட் எடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
மாடலாக அறிமுகமாகி திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் கிடைத்த கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருந்தார்
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் முதல் சீசனில் க்யூட்டான அழகியாக ரசிகர்களை கவர்ந்தார்.
இப்ப வரைக்கும் தன்னுடைய ரசிகர்களை எந்தப் பக்கமும் போக விடாமல் தனது அழகால் கட்டி இழுத்து வைத்திருக்கிறார் .

முதல் படமே ஹிட்: நடிகை ரைசா வில்சன், ஹரிஷ் கல்யாணுடன் நடித்த முதல் படமே செம ஹிட்டானதால் இவருடைய ரசிகர்களும் ரொம்பவே சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள். லிவ் இன் ரிலேஷன் ஷிப் பற்றிய கதை என்பதால், இளசுகள் இந்த படத்தை கொண்டாடினார்கள்.
குவியும் கமெண்ட்டுகள்: அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தனது கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறார் .இவருக்கு திரைப்படங்களில் வரும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் என்ன போட்டோ போட்டாலும் அதற்கு இதயத்தை பரிசாக அளித்து கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

பீச்சில் அட்ராசிட்டி: சமீபத்தில் இவர், பீச்சில் பிகினி உடையுடன் '2023 ஆம் ஆண்டின் சம்மர்' என்ற கேப்ஷன் உடன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பீச் மணலில் படுத்து கொண்டு அவர் கொடுத்த விதவிதமான போஸ் பல லட்சம் லைக்குகளை அள்ளியது. ரைசா இப்படி போஸ்ட் போட்டதும் அதை ரசிப்பதற்கு என்றே தனிக்கூட்டம் இருப்பதால், ரசிகர்களுக்காக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

வெயிலுக்கு ஏற்ற டிரஸ்: ரைசா வில்சன் வெயிலுக்கு ஏற்ற உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் ஏக்க பெருமூச்சுவிட்டு வருகின்றனர். மேலும் லைக்குகளும் கமெண்ட்களும் மலைபோல உயர்ந்து வருகிறது. ரைசா தற்போது லவ், காதலிக்க நேரமில்லை படத்திலும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். என்ன தான் படவாய்ப்பு வந்தாலும், இவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை மகிழ்விக்க தவறியது இல்லை.


Click it and Unblock the Notifications











