'என் செல்லா குட்டியை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?' பிக்பாஸ் நடிகையை பிரித்து கலாய்க்கும் ஃபேன்ஸ்
Recommended Video
சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகையின் புதிய புகைப்படத்தை ரசிகர்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸுக்கு வரும் முன், தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார்.
பிறகு, பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். பாலா இயக்கத்தில் துருவ் நடித்த வர்மா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர்
சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், திகாங்கனா சூரியவன்சி நடித்த தனுஷ் ராசி நேயர்களே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் காமெடி ஹாரார் படமான, காதலிக்க யாருமில்லை, விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
புகைப்படங்கள்
இவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வருவது வழக்கம். அதற்கு ரசிகர்களும் கடுமையான விமர்சனங்களை வைப்பார்கள். அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சுருட்டை முடியா?
புகைப்படத்தில் வெள்ளை டாப்ஸ் அணிந்து கிளாமராக இருக்கும் ரைசா, தனது ஹேர்ஸ்டைலை புதிதாக மாற்றியுள்ளார். இதை ரசிகர்கள் கடுமையாகக் கலாய்த்துள்ளனர். ரசிகர் ஒருவர், ஏங்க நல்லாத்தான இருந்தீங்க... ஏன் இந்த வேலை? என்று கேட்டுள்ளார். சிலர், சுருட்டை முடியா? சூப்பர் என்று அவரது புதிய ஹேர்ஸ்டைலை வாழ்த்தியுள்ளனர். சிலர் ஏன் இந்த கொலை வெறி என்றும் கேட்டுள்ளனர்.

என்ன சிம்ரன் இது
'என் செல்லாக்குட்டியை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? என்று ஒரு ரசிகரும் என்ன சிம்ரன் இது, பயந்தே போயிட்டேன் என்று சிலரும் கலாய்த்துள்ளனர். சிலர் இதுதான் பேஷனா? உண்மையை சொல்லணும்னா, இந்த லுக் நல்லாவே இல்லை என்றும் சிலர் கூறியுள்ளனர்.
ரைசாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











