ரைசாவின் நியூ ஹேர் கட்…ஏலியன் ரோபோட் என பங்கமாக கலாய்த்த நெட்டிசன்ஸ் !

பெங்களூரு : பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் ஹேர் கட் செய்த கையோடு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் ரைசா வில்சன் இளசுகள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

லாக் டவுனில் அனைவரும் வீட்டில் முடங்கிப் போயிருந்த நிலையில் சத்தமில்லாமல் சூர்ப்பனகை திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த ரைசா படப்பிடிப்பில் எடுத்த புகைப் படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆன நிலையில் இப்பொழுது புது ஹேர் கட் செய்து புது லுக்கில் வெளியிட்ட ரைசாவை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

க்யூட்டான ஆட்டி டியூட்

க்யூட்டான ஆட்டி டியூட்

பிரபல மாடல் அழகியாக இருந்த ரைசா வில்சன் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் திரைத்துறையில் மிகப்பெரிய உயரங்களை எட்டியதுடன் இப்பொழுது பல்வேறு திரைப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் தனது க்யூட்டான ஆட்டிடியூட் மற்றும் யாரையும் காயப்படுத்தாத பேச்சு என ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ரைசா இப்பொழுது மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பல மீம்ஸ்களையும்

பல மீம்ஸ்களையும்

தன் மீது அதிக அன்பு கொண்டுள்ள ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிலளித்து வரும் ரைசா, ரசிகர்களால் அவரது புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்ட பல மீம்ஸ்களையும் பகிர்ந்து சிலாகித்து உள்ளார்.

சத்தமில்லாமல் படப்பிடிப்பு

சத்தமில்லாமல் படப்பிடிப்பு

லாக் டவுனில் பல்வேறு பிரபலங்களும் படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் முடங்கி இருந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கிவரும் " சூர்ப்பனகை" திரைப்படத்தில் நடித்து வந்த ரைசா சத்தமில்லாமல் லாக் டவுனில் அந்த படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சூர்ப்பனகை திரைப்படத்தின் எக்ஸ்க்ளூசிவ் சூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன் அது செம வைரல் ஆனது.

புது லுக்கில்

புது லுக்கில்

சூர்ப்பனகை திரைப்படத்தை தொடர்ந்து ஏலீஸ், காதலிக்க யாருமில்லை, எப்ஐஆர் , ஹாஸ்டேக் லவ் போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் ரைசா, தற்பொழுது வித்தியாசமான ஹேர் கட் செய்த கையோடு புது லுக்கில் ஒரு க்ளிக் எடுத்து ட்விட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.

பங்கமாக கலாய்த்து

பங்கமாக கலாய்த்து

தொடர்ந்து தனது க்யூட்டான புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்த ரைசா வில்சன் இந்த புதிய ஹேர் கட் போட்டோக்களில் பார்க்கவே வித்தியாசமாக இருந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் இந்த புகைப்படங்களை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

டோரா ஹேர் கட்

டோரா ஹேர் கட்

ஒரே ஒரு முண்டா பனியன் மட்டும் அணிந்து கொண்டு புதிய ஹேர் ஸ்டைலுடன் ஃபுல் மேக்கப்பில் க்ளோசப்பில் எடுத்த பல புகைப்படங்களை வெளியிட்ட ரைசாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில், "டோரா ஹேர் கட்" எனவும், "ஏலியன் ரோபோட்" எனவும் கலாய்த்து வரும் நிலையில், மேலும் சிலர் "ப்ப்பா யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டு இருக்கு" என விஜய் சேதுபதி பாணியில் கலாய்த்தும் நீங்கள் மேக்கப் இல்லாமலேயே செம்ம அழகா இருப்பீங்க என தங்களது கருத்துக்களை தெரிவித்தும், பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X