என்னம்மா ரைசா.. கடைசியில நிலைமை இப்படி ஆகிப்போச்சே!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரைஸா தற்போது தான் செய்து கொண்டிருக்கும் வேலை குறித்த விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
வேலையில்லா பட்டதாரி பார்ட் 2வில் நடிகை கஜோலின் உதவியாளராக நடித்தவர் நடிகை ரைசா வில்சன். இவர் 2017ஆம் ஆண்டு தமிழில் முதன் முதலாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார்.
இதன் மூலம் பிரபலமான அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தன்னுடன் போட்டியிட்ட சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

ரிலீஸாகவில்லை
இதனை தொடர்ந்து அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அந்த படங்கள் இன்னும் ரிலீஸாகவில்லை.

ஓய்வில் உள்ளார் ரைசா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நடிகை ரைசாவுக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே படங்கள் கிடைத்தன. இதனால் பெரும்பாலான நேரம் ஓய்வில்தான் உள்ளார் ரைசா.
வீடியோக்கள்
அந்த ஓய்வு நேரங்களை தனது செல்லப் பிராணிகளுடன் கழித்து வரும் ரைசா, அவற்றுடன் விளையாடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
பூனையுடன் விளையாட்டு
இந்நிலையில் தான் வளர்க்கும் நாயுடன் கொஞ்சி விளையாடும் போட்டோவை வெளியிட்டுள்ள ரைசா, தான் வளர்க்கும் பூனையுடன் விளையாடி வரும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அனிமல்ஸ் தான்
இதனை பார்த்த நெட்டிசன்கள் உன் வீடு முழுவதும் விலங்குகள் தான் இருக்கு என டிவிட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











