என்னாச்சுடா பேபிம்மா.. ரத்தம் சொட்ட சொட்ட அலங்கோலமாய் பிக்பாஸ் நடிகை.. பதறி துடித்த ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ரைஸா வில்சன் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்னாச்சுடா பேபிம்மா என வாஞ்சையுடன் விசாரித்து வருகின்றனர்.
நடிகை ரைஸா வில்சன் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். வேலையில்லா பட்டதாரி 2, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ரைஸா வில்சன் தற்போது அலைஸ், எஃப்ஐஆர், தி சேஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பதறிய நெட்டிசன்ஸ்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ரைஸா வில்சன் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் ஷேர் செய்த ஒரு போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன ஆச்சு என பதறியுள்ளனர்.

தலை கீழாக..
அதாவது சேஸ் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த போட்டோதான் அது. அண்மையில் சேஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது. அதில் ரைஸா வில்சன் ரத்தம் சொட்ட சொட்ட தலைக்கீழாக தொங்கவிடப்பட்டிருந்தார்.

என்னாச்சு பேபிம்மா?
இந்நிலையில் அந்த காட்சிக்குரிய மேக்கப்பில் காட்சியாக்கப்படுவதற்கு முன்பு ஷுட்டிங் ஸ்பாட்டில் அதே கெட்டப்பில் அமர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்னாச்சு பேபிம்மா என பதறிப் போயுள்ளனர்.

த்ரில்லர் ஜானர்
இன்னும் சில நெட்டிசன்கள் என்ன படம் என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் சேஸ் படத்தின் போட்டோவை ஷேர் செய்துள்ளீர்களா என தெளிவாக கேட்டுள்ளனர். சேஸ் திரைப்படம், த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு படம் ஆகும். 'சூர்ப்பனகை' தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மா தயாரிப்பில் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











