என்னா உறி உறியுறாங்கப்பா.. லாக்டவுன் நேரத்தில் ரைஸாவுக்கு ஃபேவரைட்டான ட்ரிங்.. பாருங்க!
சென்னை: நடிகை ரைஸா வில்சன் லாக்டவு நேரத்தில் தனக்கு ஃபேவரைட்டாகிவிட்ட டிரிங்க் எது என்பது குறித்து ஷேர் செய்திருக்கிறார்.
Recommended Video
நடிகை ரைஸா வில்சன் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து படங்களில் லீடிங் ரோலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அதற்கு முன்னதாகவே விஐபி 2 படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் ரைஸா.

நடிகருடன் நெருக்கம்
அதுமட்டுமின்றி ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதேநேரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ஹரீஷ் கல்யாணுடன் நெருக்கமாக பழகினார். அதனை தொடர்ந்து அவருடன் படத்தில் இணைந்து நடித்ததால் அதிகம் கிசுகிசுக்கப்பட்டார்.

கவர்ச்சி போட்டோ
ரைஸா வில்சன் தற்போது விஷ்ணு விஷாலுடன் எஃப்ஐஆர் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

பெற்றோர் போட்டோ
தற்போது லாக்டவுன் நேரம் என்பதால் பொழுதை கழிக்க நாள்தோறும் ஒரு போட்டோவையும் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவரது பெற்றோர் திருமணமான புதிதில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்தார்.

ஃபேவரைட் டிரிங்க்
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். அதில் லாக்டவுன் நேரத்தில் சீக்கிரமாக என்னுடைய ஃபேவரைட் டிரிங்க் ஆகிவிட்டது என மைலோவை குடிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அவரது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தங்களின் ஃபேவரைட்
ரைஸா வில்சனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் லாக்டவுன் நேரத்தில் தங்களுக்கு ஃபேவரைட்டான டிரிங்கை ஷேர் செய்துள்ளனர். சிலர் மோர் என்றும், சிலர் இளநீர் என்றும் சிலர் லெமன் ஜூஸ் என்றும் தங்களின் ஃபேவரைட்டை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











