என்னாச்சு.. எலும்பும் தோலுமா.. கையெல்லாம் குச்சு குச்சா.. நடிகையின் போட்டாவால் ஷாக்கான ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை ரைஸா வில்சன் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனால் பிக்பாஸ் ரைஸா என்றே அறியப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ஹரீஷ் கல்யாணுடன் நெருக்கமானார்.

ஹரீஷ் கல்யாண்
அவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக அப்போதே பேச்சு எழுந்தது. இதனை தொடர்ந்து இருவரும் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு இருவரும் படங்களில் பிஸியாக உள்ளனர்.

சோஷியல் மீடியா
தற்போது விஷ்ணு விஷாலுடன் எஃப்ஐஆர் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ரைஸா. கடந்த சில நாட்களாக அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரைஸா, அவ்வப்போது தனது போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

ஒல்லியாக..
தற்போது லைட் ப்ளூ நிறத்தில் நீண்ட ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்திருக்கிறார் ரைஸா. இந்த உடையயில் ரொம்பவே ஒல்லியாக தெரிகிறார். அவரது கைகள் எல்லாம் குச்சி குச்சியாக உள்ளது. கையில் பர்ஸுடன் முகத்தில் ஃபுல் மேக்கப்புடன் இடுப்பில் கை வைத்தப்படி போஸ் கொடுத்துள்ளார்.

ஒல்லியா ஆயிட்டீங்க
அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கைகளா இது என கேட்டு கிண்டலடித்துள்ளனர். சில நெட்டிசன்கள் பாட்டிம்மா மாதிரி இருக்கின்றீர்கள் என்றும் என்னாச்சு ஏன் இவ்வளவு ஒல்லியாக ஆகிவிட்டீர்கள் என்றும் அதிர்ச்சிடைந்திருக்கின்றர்.

ஹாலிவுட் ஸ்டார்
சில நெட்டிசன்கள் ரைஸாவின் மேக்கப்பை பார்த்து நிப்பான் பெயிண்ட் என்று விளம்பரம் என்றும், அவரைது போஸை பார்த்து எதை தேடுகிறீர்கள் என்று கேட்டும் கலாய்த்துள்ளனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் ஹாலிவுட் ஸ்டார் போல் இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











