சேலையில இதுக்கு மேல கவர்ச்சி காட்ட முடியாதும்மா.. பிக்பாஸ் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ரைஸா வில்சன் சேலையில் திகட்ட திகட்ட கவர்ச்சிக் காட்டியிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை ரைஸா வில்சன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

குறையாத கிசுகிசு
தொடர்ந்து அவருடன் நெருக்கமாக பழகியதால் அவர்களை பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வெளியானது. இந்நிலையில் நடிகை ரைஸா வில்சன் கடந்த காதலர் தினத்தில் தனது காதலரை அறிமுகம் செய்தார். இருந்த போதும் ஹரிஷ் கல்யாணுடனான கிசுகிசு மட்டும் குறையவே இல்லை.

சோஷியல் மீடியா
ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரைஸா வில்சன் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரைஸா வில்சன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரைஸா, தொடர்ந்து தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தூசு தட்டும் ரைஸா
தற்போது போட்டோ ஷுட்டுக்களை நடத்த முடியாததால் பழைய போட்டோக்களை தூசு தட்டி வருகிறார். அந்த வகையில் தன்னுடைய பழைய போட்டோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை ரைஸா வில்சன்.

செம கிளாமர்
சேலை அணிந்திருக்கும் ரைஸா, ஒரு பக்க மார்பு, இடுப்பு என அனைத்தையும் காட்டியிருக்கிறார். அவரது இந்த போட்டோவை ஷேர் செய்த கையோடு எனக்கு பிடித்த போட்டோக்களில் ஒன்று என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இவ்ளோ அழகா இருக்காது
அதனை பார்த்த நெட்டிசன்கள், ஒரு பக்கம் புகழ்ந்து தள்ளினாலும் மறுபக்கம் மோசமாக திட்டி தீர்த்திருக்கிறார்கள். ரைஸாவின் போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், வேற லெவல் க்யூட்டிங்க நீங்க.. அந்த சேலையே வேற யார் கட்டியிருந்தாலும் இவ்ளோ அழகா இருக்காது.. செம.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கவர்ச்சி காட்ட முடியாது
ரைஸாவின் இந்த சேலை போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடி இருக்குமா என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். இன்னும் சில நெட்டிசன்கள் சேலையில் இதுக்கு மேல கவர்ச்சி காட்ட முடியாது என தெரிவித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications