எனக்கு காதலிக்க மட்டும் தான் தெரியும்.. பிக் பாஸ் நடிகையின் வைரல் வீடியோ!

சென்னை : நடிகை ரைசா டிக்டாக் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளர்.

Recommended Video

Chaya Singh rare dance video | Aishwarya Dutta• Bigg Boss

பிக் பாஸ் மூலம் பிரபலமான பலரில் ரைசாவும் ஒருவர். பியார் பிரேமா காதல் படம் மூலம் பல ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இந்த ஊரடங்கு நேரத்தில் வெட்டியாக இருக்கும் ஹீரோயின்ஸ் ஆன்லைனே கதி என்று இருக்கின்றனர். அந்த லிஸ்ட்டில் ரைசாவும் ஒருவர்.

பல வேலைகள் செய்யும் வீடியோக்கள், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் எல்லாம் பதிவிட்டு போர் அடித்துவிட்டது போல, சமீப காலமாக அனைவரும் தனக்கு தானே டிக் டாக் செய்ய துவங்கியுள்ளனர். இப்போது அந்த வீடியோக்கள் வைரலாகவும் பரவிவருகிறது.

இந்த ஊரடங்கு எல்லாரையும் இப்படி மாத்திடுச்சே என்று சொல்லும் அளவுக்கு அனைவரின் செயலும் மாறிக்கொண்டே போகிறது. சமீபத்தில் ரைசாவும் பல டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டுக் கொண்டு இருக்கிறார் .

 க்ளாமர் போட்டோசூட்

க்ளாமர் போட்டோசூட்

ஊரடங்கை நீடித்து கொண்டே இருக்கும் நிலையில் பகல் எது, இரவு எது என்று கூட தெரியாத அளவிற்கு அனைவரும் குழம்பிப்போய் இருக்கின்றனர். சமீபத்தில் ரைசாவும் மிட் நைட் போட்டோ ஷூட்ஸ் என்று சொல்லி வெறும் முது மணி மாலையுடன் பல வகையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

 இது யாரு?

இது யாரு?

பல வீடியோக்கள், புகைப்படங்கள் என வெளியிட்டு அலுத்து போய்விட்டது போல. தற்போது இவர் தனது பழைய புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு இருக்கிறார். அதில் பள்ளிக்கூட பருவ புகைப்படம், முதல் சேலை அணிந்த புகைப்படம் வரை வெளியிட்டுள்ளார் ரைசா, அந்த படத்தில் ஆள் அடையாளமே தெரியவில்லை. இது யாருனு ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் ஒருவித டைப்பாகவே இருக்கிறார் ரைசா.

 வாங்கிக்கட்டிக் கொள்ளும் ரைசா

வாங்கிக்கட்டிக் கொள்ளும் ரைசா

சமீபகாலமாக ஆன்லைனில் பிஸியாக இருக்கும் ரைசா, ரசிகர்களிடம் ஏதாவது கேள்வியை கேட்டு வாங்கிக்கட்டிக் கொள்வதை தனது டைம் பாஸ்சாக செய்து வருகிறார். ஏலியன் படத்தை பற்றி கேட்டு செம மாஸ்ஸாக மாட்டிகொண்டு தவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த விவாதத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் மூக்கை நுழைத்தவுடன் எஸ்சாகிவிட்டார் ரைசா .

 ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

அவ்வப்போது பல புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு இருக்கும் ரைசா, சமீபத்தில் மேக் அப் இல்லாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பெரும் அளவில் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இது என்ன வெறும் ரைசா இல்ல பிளாஸ்டிக் ரைசா என்று கேட்கும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் பலபலவென்று இருக்கிறார் .

 காதலிக்க தெரியும்

காதலிக்க தெரியும்

சமீப காலமாக அவர் பதிவிடும் டிக்டாக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். நக்கலடித்த படி அவர் செய்யும் சேட்டைகள் பலரையும் கவர்ந்து உள்ளது. சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், உனக்கு சமைக்க தெரியுமா, துவைக்க தெரியுமா என்பது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. உனக்கு காதலிக்க தெரியுமா என்று ஒரு ஆண் கரல் கேட்க அதற்கு ரைசா எனக்கு காதலிக்க மட்டும் தான் தெரியும் என்று அதிரடியாக தனது பாணியில் பதிலளித்து உள்ளார். இந்த டிக்டாக் வீடியோ அனைவராலும் ரசிக்க பட்டு வருகின்றது .

 பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

விதவிதமாக டிக்டாக் செய்து வெளியிடும் ரைசாவிற்கு இந்த ஊரடங்கில் பல ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. அவரை சமூகவலைத்தளங்களில் பின் தொடரும் ரசிகர்கள் இந்த வீடியோகளை பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர். இந்த ஊரடங்கு முடிந்தவுடன் ரைசா நடித்து கொண்டு இருக்கும் அலிஸ், காதலிக்க யாரும் இல்லை , ஹாஷ்டேக் லவ் போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்க படுகின்றது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X